இளம்பெண் ஒருவர் தாம் விரும்பிய காதலனுடன் தலைமறைவானதை அடுத்து, அவரை பிடிகூடிய தலிபான்கள் கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கான் நாட்டில் Ghor பகுதியை அடுத்துள்ள மலைப்பிரதேசமான Ghalim கிராமப்பகுதியில் குடியிருந்து வருபவர் Rokhsahana.

இவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் Rokhsahana தாம் விரும்பிய காதலனுடன் தலைமறைவானதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணை தேடிக் கண்டுபிடித்து வந்த தலிபான்கள் அவரை கழுத்தளவு குழிக்குள் புதைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.

கறுப்பு உடை அணிந்த ஒருவர் முதலில் அந்த பெண் மீது கல்லால் அடிக்கவும், அவருடன் இருந்த மூன்று பேர் தொடர்ந்து கல்லால் அடித்துள்ளனர்.

வலியால் துடித்து கதறியதையும் பொருட்படுத்தாமல் குழுமியிருந்த நபர்கள் அவரை கல்லால் அடித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை இணையத்திலும் பதிவேற்றி மீண்டும் இதுபோன்று நிகழாமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மாகாண அதிகாரிகள், தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து அப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளம்பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்தது குறித்து கருத்து தெரிவித்த பெண் ஆளுநரான Sima Joyenda, இந்த ஆண்டு நடைபெறும் முதல் நிகழ்வு இதுவென்றும், இதுபோன்று மேலும் நடக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற தண்டனைகள் அரிதாகி வரும் இந்த காலகட்டத்தில் தலிபான்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவம் நிகழந்துள்ளதாக மாகாண பொலிஸ் அதிகாரி Mustafa Mohseni தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply