விடு­தலைப் புலி­களின் மகளிர் பிரிவுப் பொறுப்­பா­ள­ராக இருந்த தமி­ழி­னியின் மரண நிகழ்வில் அர­சியல் வியாபா­ரத்தைச் செய்ய முற்­பட்ட தமிழ்த்­தே­சி­ய­வா­தி­க­ளுக்கு எதிர்­பா­ராத ஒரு நெருக்­க­டியும் சங்­க­டமும் ஏற்பட்­டிருந்தது.

அந்த மரண நிகழ்வில் கலந்துகொண்டு தமி­ழி­னி­யையும் விடு­த­லைப்­பு­லி­க­ளையும் புகழ்ந்து மெச்­சிய தமிழ்த்தேசி­ய­வா­தி­களைப் பற்றி மரண நிகழ்வில் நின்­ற­வர்கள் மட்­ட­மாகக் கதைத்­தனர்.

இதற்குக் கார­ணம், தாமே உச்­ச­மான செல்­வாக்கைப் பெற்­றவர் என்ற மாதிரி நடந்துகொள்­கி­ன்ற­வர்­கள், கதைக்கி­ன்ற­வர்கள் பொது இடங்­களில் உரை­யாற்­று­கின்ற­வர்கள் எல்லாம் பரந்தன் – சிவ­பு­ரத்தில் இருந்த தமிழி­னியின் வீட்டை அறியாமல், அந்த வீட்­டுக்கு அது­வ­ரை­யிலும் போகாமல் இருந்­தது ஏன்?

அந்தக் குடும்­பத்­துக்­கோ, அவர்களைப்போல மிகுந்த கஷ்­டங்­களின் மத்­தியில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கோ உத­வாமல் இருந்­ததும் இருப்­பதும் எதற்­காக?

அப்­படி பரா­மு­க­மாக இருந்துவிட்டு, இப்­பொ­ழுது மரணச்சடங்கில் வந்து அர­சியல் வியா­பாரம் செய்­வதைக் கண்ட­வர்கள் குமு­றி­னார்­கள்.  கொதித்­தார்­கள். இதுவும் ஒரு காலம்தான் என்று வாய்­விட்டுச் சிரித்­தார்கள்.

அதிலும் அங்கே கூடி­யி­ருந்த முன்னாள் போரா­ளிகள் இவர்­க­ளு­டைய தேசிய வியா­பா­ரத்தைக் கண்டு முகம் சுளித்­தனர்.

தமி­ழி­னியின் குடும்­பத்­தி­ன­ருக்கே இதெல்லாம் கடு­மை­யான எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது. தமி­ழி­னியின் கணவர் ஜெயக்­கு­மாரன் இதை­யெல்லாம் சகித்­துக்­கொள்ள முடி­யாமல் விலகிநின்­றதைப் பலரும் அவ­தா­னித்­தமை இங்கே குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்கள் தமிழ்த்­தே­சி­யத்­துக்­காக என்­ன­மா­தி­ரி­யான பங்­க­ளிப்­பை­யெல்லாம் கடந்த காலத்தில் செய்திருக்கிறார்கள்? இதைப்­பற்­றி­யெல்லாம் எங்­க­ளுக்குத் தெரி­யாதா என்ன? எங்­களை முட்­டாள்கள் என்று கருதி விட்­டார்­களா? என்ன செய்­வது எல்லாம் ஒரு காலம் தான் என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டார் ஒரு மூத்த போராளி.

எப்­ப­டியோ எல்லாம் முடிந்து தமி­ழி­னியின் இறுதிப் பய­ணமும் நிறை­வே­றி­யது. அதற்குப் பிறகு ஊடகங்கள் தமிழி­னியின் குடும்­பத்தின் நிலை­யையும் அவர்­க­ளு­டைய வீட்டின் நிலை­யையும் பற்றிப் படங்­க­ளோடு செய்திக­ளையும் கட்­டு­ரை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் வெளியிடத் தொடங்­கின.

கூடவே தமி­ழினி இவ்­வ­ளவு சிர­மங்­களின் மத்­தியில் வாழ்ந்­த­போது இந்தத் தமிழ்த்­தே­சி­ய­வா­திகள் எல்லாம் எங்கே போனார்கள்? என்ற கேள்­வி­க­ளையும் எழுப்­பின.

முகப்­புத்­தகங்­க­ளிலும் பலரும் இந்தப் போலித்­தே­சி­ய­வா­தி­களைக் குறித்த முகத்­திரை­களைக் கிழித்­தனர் பலர். தமி­ழினி மட்­டு­மல்­ல, அவ­ரைப்­போல பல முன்னாள் போரா­ளிகள் இப்­படி சிர­மங்­களின் மத்­தியில் வாழ்க்கையை நடத்தமுடி­யாமல் நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவர்­க­ளுக்­கான உத­வி­களைச் செய்­யாமல் தப்­பித்­துக்­கொள்­வ­தற்­கான காரணம் என்ன? என்ற கேள்விகள்பரவலாக எழுப்­பப்பட்­டன.

kudisaiஅத்­துடன் தமி­ழினி குடி­யி­ருந்த பரந்தன் – சிவ­புரம் பகு­தியில் மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டங்கள் கிடைக்காமைக்­கான கார­ணத்­தையும் அதற்குத் தடை­யாக இருப்­ப­வர்­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்தி பல குறிப்­புகள் எழுதப்பட்டன.

அந்தக் குறிப்­பு­களும் தக­வல்­களும் தமிழ்த்­தே­சி­ய­வா­தி­க­ளையே தாக்­கின. உண்­மை­யான கார­ணமும் நிலையும் அதுதான்.

இதெல்லாம் தமிழ்த்­தே­சியத் தரப்­பி­ன­ருக்கு வெட்­கத்­தையும் அவ­மா­னத்­தையும் அளித்­தது. அவர்கள் பதிலளிக்க முடி­யாத கேள்­வி­களின் முன்னே நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சிவ­பு­ரத்தில் தமி­ழி­னியின் வீடு குடி­சை­யாக இருந்­த­தற்குக் காரணம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முருகேசு சந்­தி­ர­கு­மாரின் பார­பட்­ச­மான நட­வ­டிக்­கையே என்ற பொய்ப்­ப­ரப்­பு­ரை கோயபல்ஸ் பாணியில் கட்டவிழ்த்து விடப்­பட்­டது.

இப்­படிப் பொய்ப்­ப­ரப்­புரை செய்­வதன் மூலம் தம்மை நோக்கி வந்த – வரு­கின்ற கண்­ட­னங்­களைத் திசை திருப்பி விடலாம்.

அத்­துடன் தம்­மு­டைய பொறுப்­பையும் தட்டிக்கழித்து விடு­வ­தற்கும் இது வாய்ப்­பாகும் என்று கருதி சிவ­புரம் பகுதி மாவீரர் போராளி குடும்­பங்­களின் பிர­தே­ச­மாக இருந்த கார­ணத்­தி­னா­லேயே சந்­தி­ர­குமார் புறக்­க­ணிப்பைச் செய்தார் என்ற கட்­டுக்­கதையை அவிழ்த்து விட்­டுள்­ளனர்.

ஆனால், இது முழு­மை­யான பொய் என்­ப­தையும் இந்தக் கட்­டுக்­க­தையின் பின்னால் உள்ள உண்­மை­க­ளையும் மக்­களும் அதி­கா­ரி­களும் நன்­றாக அறிவர். .

thamiliniஉண்மை நிலை இதுதான்

தமி­ழினி இறு­திப்­போரில் சர­ண­டைந்­தி­ருந்­த­போது அதை விமர்­சித்­த­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் தமிழ்த்­தே­சியம் கதைப்­போரே.

விடு­த­லைப்­பு­லி­களின் மர­புப்­படி தமி­ழினி ஏன் சயனைட் உட்­கொள்­ள­வில்லை? எதற்­காகப் படையி­ன­ரிடம் சரண­டைந்தார்? என்று பல கேள்­வி­களை அந்த நாட்­களில் கேட்­டார்கள்.

இது ஒரு மனி­தா­பி­மா­ன­மற்ற கேள்வி என்­பதைப் பற்றி இவர்கள் என்றும் சிந்­தித்­த­தில்லை.

இது போதா­தென்று பின்­னாளில் அவர் சிறையில் இருந்­த­போதோ, புனர்­வாழ்வு பெற்று வீடு­தி­ரும்­பிய பின்­னரோ, நோயுற்று உத­விகள் போதாமல் அவ­திப்­பட்­ட­போதோ அதைக் கண்டுகொள்ளாமல் இருந்­த­வர்­களும் இவர்­களே.

sritharanஆனால், தமி­ழினி மர­ண­மாகி விட்டார் என்ற செய்தி ஊட­கங்­களில் பர­வ­லாக வெளிவரத் தொடங்க முண்டியடித்துக் கொண்டு அனு­தாபம் தெரி­விக்க ஓடி வந்­தார்கள். அப்­படி வந்­த­வர்­களில் பல­ருக்குத் தமி­ழி­னியின் வீடு எங்கே இருக்­கி­றது என்­பதே தெரிந்­தி­ருக்­க­வில்லை.

இறு­தியில் எப்­ப­டியோ பரந்­தனில் உள்ள சிவ­புரம் என்ற குடி­யி­ருப்­புக்கு வந்­த­வர்கள் தமி­ழி­னியின் வீட்­டைக் ­கண்­டு­பி­டித்­தார்கள்.

ஆனால், அது இருந்த நிலை­யையும் கிரா­மத்தின் நிலை­யையும் கண்­டதும் அவர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாகி விட்­டது. தலைக்­கு­னிவும் ஏற்­பட்­டது.

ஆனாலும் தங்­க­ளுக்­குள்ளே பெரு­கிய குற்­ற­வு­ணர்ச்­சியை மறைத்துக்கொண்டு வழ­மை­ ­போல தங்­க­ளு­டைய தமிழ்த்­தே­சியப் புனைக­தை களை அவிழ்த்து விட்டு, அந்த கதைகளின் மறைவில் தப்­பித்­துக்­கொள்ள முயற்சித்தனர்.

பரந்தன் -– சிவ­புரம் குடி­யி­ருப்பின் கதையும் நிலையும்

இந்­தக்­ கு­டி­யி­ருப்பில் உள்ள காணிகள் 1970 களில் மத்­திய வகுப்­புத்­திட்­டத்தில் கீழ் 7 பேருக்கு வழங்­கப்­பட்­டன.

பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­திக்­கா­கவும் வேலை­யற்ற மக்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பை வழங்­கு­வ­தற்­கா­கவும் என்ற அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­தினால் தலா 10 ஏக்கர் வீதம் வழங்­கப்­பட்ட இந்தக் காணி­களைப் பெற்­ற­வர்கள் இவற்றை அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை.

அதற்­கான காலச்­சூழலும் அமை­ய­வில்லை. காணி­களைப் பெற்­ற­வர்கள் நாட்டை விட்டுப் புலம்­பெ­யர்ந்து வெளிநா­டு­களில் குடியேறி விட்­டனர். இதனால், இந்தக் காணிகள் புறம்­போக்கு நில­மாக இருந்­தன.

போரின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்­களும் காணி­யற்ற மக்­களும் இந்தக் காணி­களில் குடி­யே­றி­னார்கள். மீதமாக இருந்த காணி­களில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் ஆத­ர­வைப்­பெற்ற காணி­யற்ற மக்­க­ளுக்கு சில காணி­களை புலிகள் வழங்­கி­னார்கள்.

ஆகவே இது ஒரு முற்­று­மு­ழு­தான மாவீரர் குடும்­பங்­களின் குடி­யி­ருப்­பா­கவோ போராளி குடும்­பங்­களின் குடி­யி­ருப்­பா­கவோ அமை­ய­வில்லை.

இறு­திப்­போரின் பின்னர், இங்­கே­யி­ருந்த மக்கள் மீண்டும் வந்து இந்தப் பகு­தி­க­ளிலே குடி­யே­றி­னார்கள். 240 குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற்­றத்தின் பின்னர் இங்கே குடி­யே­றி­யுள்­ளன.

அப்­படி வந்து குடி­யே­றிய மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக தற்­கா­லிக வீடுகள் உட­னடி வேலைத்­திட்­டத்தின் மூலம் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டன.

குடிநீர் விநி­யோ­கமும் சில உத­வி­களும் வழங்­கப்­பட்­டன. அது மட்­டு­மல்ல, இவர்­க­ளுக்­கான மின்­சா­ரமும் வழங்கப்­பட்­டது.

as-300x245

முரு­கேசு சந்­தி­ர­குமார்

இதை விசே­ட­மாகச் செய்துகொடுத்­தவர் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்­தி­ர­குமார். நாட்டிலுள்ள அனை­வ­ருக்கும் மின்­சாரம் என்ற அர­சாங்­கத்தின் திட்­டத்தைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி, காணிக்கான உரிமம் இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. மின்­சா­ரத்தை நாம் வழங்­குவோம் என்று முயற்சி எடுத்து மின்­வி­நி­யோகம் வழங்கப்­பட்­டது.

ஆனால், மீள்­கு­டி­யேற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் நிரந்­தர வீட்­டுத்­திட்­டத்தை இவர்கள் பெறமுடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர்.

இதற்குக் காரணம், இந்தக் காணிகள் இவர்­க­ளுக்­கு­ரி­யவை அல்ல. அதற்­கான ஆவ­ணம் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட முடி­யா­தி­ருந்­தது.

ஏற்­க­னவே மத்­திய வகுப்­புத்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்ட காணி­களை உரி­ய­வர்­க­ளிடம் இருந்து திரும்பப் பெற்றுக்­கொள்­ளாமல் தற்­போது குடி­யி­ருப்­போ­ருக்கு வழங்க முடி­யாது.

எனவே, இந்தக் காணி­களை அதில் குடி­யி­ருக்கும் இந்த மக்­க­ளுக்கு வழங்கவேண்­டு­மாக இருந்தால் இந்தக் காணி­களை ஏற்­க­னவே பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளிடம் இருந்து திரும்­பப் ­பெறு­வ­தற்­கான ஏற்­பாட்டைச் சட்­ட­மூலமாகச் செய்­ய­வேண்டும். ஆகவே அதற்­கான முயற்­சி­களில் முரு­கேசு சந்­தி­ர­குமார் ஈடு­பட்­டுக்­கொண்டிருந்தார்.

இதே­வேளை இந்தக் கிரா­மத்தில் இருக்கும் தங்­களை முன்­ப­கு­தியில் இருப்போர் பார­பட்­ச­மாக நடத்­து­கி­றார்கள் என்று சிவ­புரம் குடி­யி­ருப்­பா­ளர்கள் சந்­தி­ர­கு­மா­ரி­டமும் பிர­தேச செய­ல­ரி­டமும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து, இரண்டு கிராம அபி­வி­ருத்திச் சங்­கங்­க­ளாகத் தனித்­த­னி­யாகப் பிரித்து விடும் நட­வ­டிக்­கையை பிர­தேச செய­லரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மேற்­கொண்­டனர்.

இது தொடர்­பாக பிர­தேச செயலர் மக்­களின் கருத்­து­களைக் கேட்­ட­றியும் நட­வ­டிக்­கையில் கிராம அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தரின் மூல­மாக ஈடு­பட்டார்.

சிவ­புரம் குடி­யி­ருப்­பைப் ­போல கண்­டா­வளை மற்றும் கரைச்சிப் பிர­தே­சங்­களில் மத்­திய வகுப்­புத்­திட்­டங்­களில் மேலும் பல வறிய நிலைக்­ கு­டும்­பங்கள் குடி­யி­ருக்­கின்­றன.

ஆகவே இவர்கள் அனை­வ­ரு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வைக் காணும் முக­மாக உரிய விபரங்கள் பிர­தேச செய­ல­கத்தின் மூல­மாகத் திரட்­டப்­பட்டு, வட­ மா­காண காணி ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் ஊடாக மத்­திய அரசின் காணி ஆணை­யாளர் நாய­கத்­திடம் மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில்தான் ஆட்­சி­யு­ரிமைச் சட்­ட­மூலம் என்ற சட்­டத்­தி­ருத்­தத்தை செய்­வ­தற்கு அப்­பொ­ழுது நீதியமைச்­ச­ராக இருந்த ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் 07.08.2014 இல் கொண்டுவந்தார்.

இந்தச் சட்­டத்­தி­ருத்­தத்­துக்கு தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஆத­ரவை வழங்­கினார். இதனை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­திக்­கு­ழுக்­களின் தலை­வ­ரு­மாக இருந்த மு. சந்­தி­ர­குமார் கடு­மை­யாக எதிர்த்தார்.

அது மட்­டு­மல்ல, பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியே பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சி­களின் உறுப்­பி­னர்­க­ளிடம் இந்தச் சட்­டத்­தினால் வறிய நிலை­யி­லுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் பாதிக்­கப்­படும் என்ற நிலையை எடுத்து விளக்­கினார். இத­னை­ய­டுத்து சட்­டத்­தி­ருத்தம் தற்­கா­லி­க­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இந்தப் பிரச்­சினை பாரா­ளு­மன்­றத்தில் மட்­டு­மல்ல, அதற்கு வெளியிலும் சூடாகப் பேசப்­பட்­டது. இதனால் வீர­கே­சரி பத்­தி­ரிகை இது தொடர்­பாக அப்­பொ­ழுது சுமந்­தி­ரனை 10.08.2014 திக­தியும் சந்­தி­ர­கு­மாரை 17.08.2014 திக­தியும் அடுத்­த­டுத்து பேட்டி கண்டு இந்த நிலைமை தொடர்­பாக எழு­தி­யது.

அதில் சுமந்­திரன், முப்­ப­தாண்­டு­க­ளாக நாட்டு நிலைமை சீராக இல்­லாத கார­ணத்­தி­னா­லேயே இந்தக் காணிகளை உரி­ய­வர்கள் பரா­ம­ரிக்க முடி­யாமல் போன­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆகவே இப்­பொ­ழுது காணி­களின் உரித்­தா­ளர்­க­ளுக்குக் கால எல்லை விதிக்­கப்­ப­டக்­கூ­டாது. அப்­பொ­ழு­துதான் அவர்கள் மீண்டும் வந்து தமக்­கான காணி­களைப் பரா­ம­ரிக்க முடியும் என்றார்.

இதை மறுத்த முரு­கேசு சந்­தி­ர­குமார், இந்தக் காணிகள் தொழில்­வாய்ப்பை மக்க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கா­கவும் பிர­தேச அபி­வி­ருத்­திக்­கா­கவும் அர­சாங்­கத்­தினால் மத்­திய வகுப்­புத்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டவை.

இவ்­வா­றான காணி­களில் இன்று 40,000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வன்னி மாவட்­டங்­களில் குடி­யி­ருக்­கி­றார்கள். கிளி­நொச்சி மாவட்­டத்தில் சிவ­புரம், நாதன் திட்டம், உழ­வனூர், புன்­னை­நீ­ராவி போன்ற இடங்­களில் 1,300வரையான குடும்­பங்கள் இவ்­வா­றுள்­ளன.

இந்த ஆட்­சி­யு­ரி­மைச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்டால் நிச்­ச­ய­மாக இந்த மக்கள் நடுத்­தெ­ரு­வுக்கு வர­வேண்டியிருக்கும்.

ஆகவே போர்க்­காலப் பாதிப்­புக்கள் உள்­ளிட்ட அத்­தனை நெருக்­க­டி­க­ளையும் சந்­தித்த மக்­களை மீண்டும் ஒரு அவலநிலைக்குத் தள்­ளக்­கூடாது.

அப்­ப­டி­யான ஒரு நிலையை யாரும் அனு­ம­திக்க வேண்டாம். எனவே இந்த மக்­க­ளுக்கு இந்தக் காணி­களை வழங்கக் கூடி­ய­வ­கையில் சட்­டத்­தி­ருத்­தத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து புதிய ஆட்­சியின் பிறகு காணி ஆணை­யாளர் நாயகம் சீ.ஏ.ராஜ­பக் ஷ கடந்த 23.03.2015 அன்று கிளி­நொச்­சிக்கு காணி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்கும் நிகழ்­வுக்கு வந்­தி­ருந்­த­போது சிவ­புரம் பகு­திக்கு விஜயம் செய்­யு­மாறு சந்­தி­ர­கு­மா­ர் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க, அவர் அந்தப் பகு­திக்கு கண்­டா­வளைப் பிர­தேச செயலர் த. முகுந்­த­னுடன் விஜயம் செய்தார்.

சிவ­புரம் பகு­தியில் குடி­யி­ருக்கும் மக்­க­ளது நிலை­மை­யும் நேரில் காண்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, அவர், ஏற்­க­னவே தனக்கு பிர­தேச செய­லாளர் மூல­மாக அனுப்பி வைக்­கப்­பட்ட விபரங்களின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிச்சென்றார்.

பின்னர் காணி ஆணை­யாளர் நாய­கத்தின் அறி­வித்தல் பிர­தேச செய­ல­ருக்கு கிடைக்கப் பெற்­றது. அதன்­படி உரிய காணி­களை மீளப்­பெ­று­வ­தற்­கான பொது அறி­வித்­தல் விடுக்­கப்­பட்­டது.

இந்த அறி­வித்தல் பகி­ரங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து தற்­போது குடி­யி­ருக்கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு காணி­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நட­வ­டிக்­கை­யின்­படி அடுத்து வரும் மாதங்­களில் காணிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கப்­படும். அதைத் தொடர்ந்து குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டங்­களும் பிர­தே­சத்­துக்­கான அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இவை எதைப்­பற்­றியும் தெரி­யாமல் தமது கற்­ப­னைக்­கெட்­டி­ய­வ­ரையில் பொறுப்­பற்ற விதமாக மக்­க­ளுக்குப் பொய்­யு­ரைத்­துள்­ளனர். இந்த அர­சியல் பிர­மு­கர்கள்.

இது மக்­களை விட்டு மிகத்தொலைவில் இவர்கள் இருப்­ப­தற்குச் சான்­றாகும். ஆகவே தன்­னு­டைய இறப்­புக்கூ­டாக தமிழ்­மக்­களின் அக­வி­ழியைத் திறக்க முற்­பட்­டி­ருக்கும் தமிழினி, தான் ஒரு போராளிதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தான் துயருற்றாலும் தான் சார்ந்த மக்களுக்கு ஒளியாக அவர் மாறியிருக்கிறார்.

சி. இலங்­கேஸ்­வரன்

90315160LTTE3சி. இலங்­கேஸ்­வரன்

Share.
Leave A Reply