தமிழ்நாடு: 5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முனைந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவைர சுற்றிவளைத்த ஊர்மக்கள் நையப்புடைத்து அவரை கம்பத்தில் கட்டிவைத்த சம்பவம் திருவண்ணாமலையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவரு வதாவது;
திருவண்ணாமலை நகரத்தில் செட்டிகுளமேட்டில் உள்ள கார் சாரதியும் தென்றல் நகரில் முச்சக்கர வண்டி சாரதியாக உள்ள ஐயப்பனும் நண்பர்கள். இருவரும் தினமும் ஒன்றாக மது அருந்துவார்கள்.
நேற்று மதியம் நண்பனை தேடி செட்டிகுளமேட்டுக்கு ஐயப்பன் சென்றுள்ளார். குடிபோதையில் இருப்பதை பார்த்துவிட்டு “அவர் வீட்டில் இல்லை இருங்க அவரோட அண்ணனை அழைத்து வருகிறேன்” என்று கார் சாரதியின் மனைவி தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
வீட்டுக்குள் இருந்த அந்த 5 வயது சிறுமியிடம், தகாத முறையில் முச்சக்கர வண்டி சாரதி நடந்துள்ளதோடு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முனைந்துள்ளார்.
அதன்போது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது முச்சக்கர வண்டி சாரதி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முனைந்துள்ளார்.
இதேவேளை சத்தம் கேட்டு தனது கணவரின் அண்ணனை அழைத்து வரச்சென்ற பெண்மணி ஓடிவந்து குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரச மருத்துவம னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தையை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மேற்படி நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அப் பகுதி மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த திருவண்ணாமலை நகர பொலிஸார் மக்களிடம் இருந்து அவரை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.