நானும் ரௌடிதான் திரைப்படத்தை தொடர்நது விஜய் சேதுபதி, மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர போகின்றாராம். அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படத்தில் தரிஷாவும் நடிக்கவுள்ளாராம்.

விஜயசேதுபதி சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது நயன்தாரா முன்னணி நாயகி. அதனால் தான் ஹீரோவான பிறகு அவருடன் டூயட் பாட வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தபோதும், ஒருவேளை அவர் மறுத்து விட்டால் என்ன செய்வது என்று அந்த ஆசையை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார் விஜயசேதுபதி.

ஆனால், நானும் ரௌடிதான் திரைப்படத்துக்கு விஜயசேதுபதியை ஒப்பந்தம் பண்ணுவதற்கு முன்பே நயன்தாராவைதான் ஒப்பந்தம் செய்திருந்தார் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ்.

அதனையடுத்து, நயன்தாரா நாயகி என்றதும் மறுபேச்சு பேசாமல் கமிட்டாகி விட்டார் விஜய் சேதுபதி.

அப்படி அவர்கள் நடித்தத் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது. விளைவு, இப்போது அனைத்து மேல்தட்டு ஹீரோயின்களும் விஜயசேதுபதியுடன் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது, இன்னொரு திரைப்படத்தில் மீண்டும் விஜயசேதுபதி- நயன்தாரா இணைந்துள்ளனர். நானும் ரௌடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் அந்தத் திரைப்படத்தை இயக்குகிறாராம். ஆக, நானும் ரௌடிதான் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையப்போகிறது.

மேலும், இந்தத் திரைப்படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷாவும் நடிக்கிறாராம். இதுவரை நயன்தாரா- த்ரிஷா ஆகிய இருவரும் கடும் தொழில் போட்டியாளர்களாக இருந்து வந்தவர்கள்.

அண்மையில்தான் அவர்களுக்கிடையே நட்பு வளரத் தொடங்கியிருக்கிறது. அதோடு, த்ரிஷாவை முன்னணி ஹீரோக்கள் கண்டுகொள்ளாத நிலையும் உருவாகியிருக்கிறது.

அதனால், இரண்டு நாயகிகளில் ஒருவர் என்றபோதும், இந்த வாய்ப்பு அவரைத் தேடிச்சென்றதும் உடனே ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

பாபி சிம்ஹா – ரேஷ்மி நிச்சயதார்த்தம்

04-10-2015

Kollywood-news-14571‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’. ‘மசாலா படம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாபி சிம்ஹா. தற்போது ‘கோ 2’, ‘பாம்பு சட்டை’, ‘இறவி’ உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

‘இனிது இனிது’, ‘கிருமி’ போன்ற படங்களில் நடித்துள்ளவர் ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது பற்றி இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரியவர அவர்கள் சந்தித்து பேசினர்.

காதலுக்கு ஓகே சொன்னதுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடத்த முடிவு செய்தனர். பாபி சிம்ஹா, ரேஷ்மி இருவரும் படங்களில் நடித்து வருவதால் உடனடியாக திருமணத்துக்கான தேதி முடிவு செய்யாமல் தள்ளிப்போட்டு வந்தனர்.

இந்நிலையில் வரும் 8ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள கெஸ்ட் அவுஸ் ஒன்றில் நிச்சயதார்த்த விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருவீட்டு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.பாபி சிம்ஹா கூறும்போது , ‘உறுமீன் படத்தின்போது எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

குடும்பத்தார் சம்மதத்துடன் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. அன்றுதான் திருமண தேதி முடிவாகும். திருமணத்துக்கு பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பாரா, மாட்டாரா என்கிறார்கள்.

அதுபற்றி அவர்தான் முடிவு செய்வார். என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்’ என்றார்.

Share.
Leave A Reply