எல்­பிட்­டிய, ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ரன் தொட்­டு­வி­லவில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த இரு இளை­ஞர்கள் மற்­றொரு மோட்டார் சைக்­கிளில் வந்த இரு­வரால் சுட்டுக்கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்பவம் நேற்றுக் காலை 8.50 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்தின் போது வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான

23 வய­து­டைய ரங்க விஜே­சு­ரேந்­திர மற்றும் அங்கு வேலை­பார்த்த 24 வய­து­டைய இஷான் சந்­திக ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ள குறித்த இரு­வரும் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும் பொலிஸ் பேச்­சாளர் மேலும் குறிப்­பிட்டார்.

நேற்று காலை குறித்த இரு­வரும் வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் நோக்கி மோட்டார் சைக்­கிளில் சென்றுகொண்­டி­ருந்த போது எதிர்த்­தி­சையில் மற்­றொரு மோட்டார் சைக்­கிளில் வந்த இருவர் 9 மில்­லி­மீற்றர் ரக துப்­பாக்கி ஒன்­றினால் சர­ம­ரி­யான துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதன்­போது மோட்டார் சைக்­கி­ளுடன் கீழே சாய்ந்­துள்ள இரு இளை­ஞர்­களும் அவ்­வி­டத்­தி­லேயே உயிரிழந்துள்ளனர்.

சம்ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்திற்கு விரைந்த ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில், குறித்த இரு இளை­ஞர்­க­ளுடன் வேறு இரு இளைஞர்­க­ளுக்கு இருந்து வந்த தனிப்­பட்ட பகையே கொலைக்­கான காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவ இடத்தில் இருந்து 9 வெற்றுத் தோட்­டாக்கள் பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் துப்­பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ள இரு சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார் அடையாளம் கண்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­களில் ஒருவர் இரா­ணு­வத்தில் இருந்து தப்பி வந்­தவர் என விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்­ட­துடன் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்ய விஷேட நட­வ­டிக்­கைகள் முன்னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் தெரிவித்தார்.

எல்பிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் மஜிஸ்திரேட் விசாரணைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் சடலங்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்கக வைக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply