வரலாற்றிலேயே… “ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான  மூளைசாலிகளாக  ஈழத்தமிழர்கள்   (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரன் )  இருந்திருக்கிறார்கள்  என்பது  இந்த கதையின்  மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.

அந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால்  “தமிழீழம்”   எப்பவோ  மலர்ந்திருக்கும்…

1988 செப்ரெம்பர் 28ல் வெளியான ஓரளவு அதிர்ச்சி தரும் செய்திகளிடையே மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி ஒன்று இடம்பெற்றதாக குறிப்பிடும் செய்தி ஒன்றும் சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்தது.

சதி முயற்சிக்கு தலைமை தாங்கிய மாலைதீவு தலைவர் அப்துல்லா லுபுதிக்கு ஸ்ரீலங்கா தமிழ் இராணுவக் குழுவான தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் எனப்படும் புளொட் அமைப்பு உதவி செய்துள்ளது என்பதை கேள்விப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

இதோ அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தோல்வியில் முடிந்த கதை….

ஸ்ரீலங்காவை சோந்த குழு ஒன்றினால் மற்றொரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குத் திட்டமிடுவதில் ஈடுபட எப்படி முடிந்தது? புளொட் அமைப்பின் ஒரு கடந்தகால பேச்சாளரான – ஸ்கந்தா – இது பற்றி கூறுகையில்,

தான் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து லுபுதியை (Abdullah Luthufi) பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இருப்பதாகவும், அவர் வெறுமே உமாவிற்கு ஆதரவான ரசிகர்களில் ஒருவர் என்று மட்டுமே தான் நம்புவதாகவும் சொல்லியிருந்தார்.

“லுபுதி என்னுடன் அரசியல் பற்றி வெகு அபூர்வமாகவே பேசியிருந்தாலும்” அவர் எப்போதும் சாதாரண மாலைதீவு மக்கள் சர்வாதிகாரி கையுமின் ஆட்சியின் கீழ் எதிர்கொள்ளும் துயரங்களைப் பற்றியே குறிப்பிடுவார். …

“பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலரிலும் குறைந்தளவு பணத்திலேயே வாழும் கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” என்று அவர் வழக்கமாகச் சொல்லுவார்.

“யாராவது அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் பகிரங்கமாகவே தொந்தரவுக்கு ஆளாவார்கள்”. அந்த சர்வாதிகாரி தன்னை கொன்றுவிடலாம் என்பதால் தனக்கு தனது சொந்த நாட்டுக்குப் போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

220px-Maumoon-Abdul-GayoomMaumoon-Abdul-Gayoom.

லுபுதி சொல்வதின்படி, அப்போதைய ஜனாதிபதி கையும் (Gayoom) பெருமளவு இளைஞர்களை எகிப்தில் உள்ள மதரசாக்களுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு உத்வேக போதனையை போதிப்பதின் மூலம், நாட்டை ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இணங்கிச் செல்லும் பாதையை திறந்து விட்டுள்ளார்,

“உமா மற்றும் லுபுதி ஆகியோரிடையே பிணைப்பு வலுப்படுவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரான தங்களின் வெறுப்பை பகிர்ந்து கொண்டதுதான் என்று நான் நம்பகிறேன்.

மத்திய குழு அல்லது அரசியற் குழுவில் உள்ள நாங்கள் எவரும் மாலைதீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் தொடர்பு கொண்டிருக்கவில்லை” என்று ஸ்கந்தா சொன்னார்.

மாலைதீவில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மத்திய குழுவையோ அல்லது அரசியல் குழுவையேர் கலந்தாலோசித்து அவர்கள் சம்மதம் பெறாமல், அவரது அதிகாரத்தை பயன்படுத்தியது மற்றும் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஒரு அங்கத்தவர்கள் குழுவை அனுப்பியது தொடர்பான பல சுய விமர்சன அமர்வுகள் இடம்பெறலாயின.

“முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, நாங்கள் சர்வதேசவாதிகள் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தில் உள்ளவர்கள்.

மாலைதீவைச் சேர்ந்த அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் ஒரு குழுவினர் உதவிக்காக எங்களை அணுகினார்கள்;;;…அவர்களிடம் பணம் இருக்கவில்லை.

ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை நேசித்தார்கள் மற்றும் ஒரு அடக்குமுறைத் தலைவரை தூக்கியெறிய விரும்பினார்கள்” என்று சொல்லி உமா தனது தரப்பை நியாயப் படுத்தினார். கையும் தனது நாட்டை மத தீவிரவாத பாதையில் வழிநடத்தி கொண்டிருப்பதை லுபுதி சுட்டிக்காட்டினார்.

மாலைதீவு ஸ்ரீலங்காவில் இருந்து மிகவும் குறுகிய தூரத்தில் உள்ள ஒரு நாடு மற்றும் மத தீவிரமானது விரைவாக பரவி ஏற்கனவே இனவாதத்தினால் பிளவடைந்துள்ள இந்த நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கும்.

மத தீவிரவாதம் இலகுவில் உழைக்கும் வர்க்கத்தினரை கூறுகளாகப் பிரித்து அழிவை ஏற்படுத்தும், அது அவர்களை அடக்குமுறை அதிகாரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களது பகடைக் காய்களாக மாற்றிவிடும். “

உங்களுக்குத் தெரியுமா இந்தியர்களால் ஆயுதங்கள் களையப்பட்ட ஒரேயொரு இயக்கம் நாங்கள் மட்டும்தான்.

மக்கள் வசிக்காத தீவு ஒன்றில் நாங்கள் ஆயுதங்களை இறக்குவதற்கு லுபுதி சம்மதித்தார், பின்னர் நாங்கள் அதை சிறு படகுகள் மூலமாக கொண்டு வரலாம், இவைதான் நான் தன்னிச்சையாக முடிவு செய்ததற்கான காரணங்களில் சில” என அவர் சொன்னார்.

நாங்கள் வேகமாகச் செயற்பட வேண்டியிருந்தது, ஒருவேளை கலந்தாலோசிக்காது நான் செயற்பட்டது தவறாக இருக்கலாம். “ எனினும் எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் நாங்கள் கியுபாவில் பற்றிஸ்ராவை தூக்கியெறிந்த கஸ்ட்ரோ மற்று சே குவேரா ஆகியோருடன் ஒப்பிடப் பட்டிருப்போம் மற்றும் கூலிப்படையினராக குறிப்பிடப் பட்டிருக்க மாட்டோம்.

“மாலைதீவினருக்கு உதவியற்காக எங்களுக்கு ஒரு ஒற்றைச் சதம் கூட வழங்கப்படவில்லை. உண்மையில் அவர்களுக்கு உதவும் எங்கள் முயற்சியில் நாங்கள்தான் ஆட்களையும் பணத்தினையும் இழந்துள்ளோம்.”

லுபுதியின் வேண்டுகோள் எளிமையானதும் நேரடியானதுமாகும். ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலாக மக்களுடன் அதிகம் நட்புள்ள ஒரு ஆட்சியை ஏற்படுத்த அவர் விரும்பினார்.

மாலைதீவு பயணத்தில் தான் ஈடுபடுவது என்று உமா முடிவெடுத்ததின் பின்னர் சுமார் 80 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு இரகசிய பிரிவு உருவாக்கப்பட்டது என்று ஸ்கந்தா சொன்னார்.

armyமாதக் கணக்காக புளொட் அங்கத்தவர்கள் மாலைதீவுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் நுழைந்து நில அமைப்பை கண்காணித்து வந்தார்கள், லுபுதியின் குழுவினருடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி ஒரு ஆயுத கைய யேற்பை நடத்த திட்டம் தீட்டினார்கள்.

ஐரோப்பாவில் உள்ள மற்றொரு குழுவினர் பயணத்துக்கு பயன்படுத்த தக்க கப்பல் ஒன்றை வாங்குவதற்கு பொறுப்பாக இருந்தனர்.

கப்பல் கொள்வனவு இரண்டு வித நோக்கங்களை கொண்டதாக இருந்தது – ஒன்று மாவைதீவினர் மற்றும் புளொட் அங்கத்தினரை மாலைதீவுக்கு அனுப்பி அங்கு அவர்கள் நிருவாகத்தை கைப்பற்ற உதவுவது மற்றும் அடுத்தது நீண்ட காலத் திட்டத்தின்படி ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு வேண்டிய ஆயுதங்களை அனுப்புவதற்கு அதைப் பயன்படுத்துவது.

இந்த நடவடிக்கைக்கான திட்டம் உமாவினால் தீட்டப் பட்டது, லுபுதி மற்றும் இந்த செயற்பாட்டுக்கு தலைமை தாங்கிய இரண்டு புளொட் தலைவர்களான வசந்தி மற்றும் பாருக் ஆகியோர் மிகவும் சிக்கலான விடயங்களை எளிமையாகத் தீர்க்கக் கூடியவர்கள்.

துரதிருஷ்டவசமாக இந்த திட்டம் ஆரம்பக் கட்டத்திலேயே சிதைவடைந்து விட்டது. இந்த நடவடிக்கைக்காக கொள்வனவு செய்யப்பட்ட கப்பல், பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு புறப்பட இருந்த நாளுக்கு சற்று முன்னதாக காப்புறுதிக் கட்டணம் செலுத்தவில்லை என்கிற காரணத்துக்காக பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி திட்டத்தை நடத்துவதற்காக குழுவானது இரண்டு இழுவைப் படகுகளை கல்பிட்டி வழியாக கடத்திச் சென்றது.

ஒரு இழுவை படகில் இருந்த குழுவுக்கு வசந்தி தலைமை தாங்கினார். இரண்டாவது படகில் இருந்த குழுவை புளொட் அங்கத்தவர் பாருக்கும் மற்றும் லுபுதியும் வழி நடத்தினார்கள்.

திட்டத்தின்படி பாபுவின் தலைமையின் கீழ் செல்லும் ஒரு குழுவினர் வானொலி நிலையத்தையும் மற்றும் தொலைத் தொடர்பு வலையமைப்பையும் கைப்பற்றுவது.

பாருக் தலைமையிலான குழு ஜனாதிபதி கையும் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் அகியோரைக் கைது செய்வது, லுபுதி மற்றும் வசந்தி தலைமையிலான குழுக்கள் அங்கிருந்த ஒரேயொரு இராணுவ தளத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப் பட்டது.

வரும் குழுக்களைச் சந்திப்பதற்காக பிரதான நிலப்பரப்பில் லுபுதியின் குழு ஒன்று காத்திருந்து, வரும் குழுவினருடன் இணைந்து நிருவாகத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப்பட்டது.

tumblr_lub1o1TcNu1qzbl0eஇரண்டு குழுக்களும் ஒக்ரோபர் 30 நள்ளிரவு புறப்பட்டன மற்றும் அவர்களது செல்லிடத்தை நவம்பர் 2 ல் அடையும் என எதிர்பார்க்கப் பட்டது. உடனடியாகவே பிரச்சினை எழுந்தது, காலநிலை மோசமாக மாறியதால் இழுவைப் படகு அதன் பாதையை விட்டு விலகிச் சென்றது.

காற்று படகினை அவுஸ்திரேலியாவை நோக்கித் தள்ளத் தொடங்கியது. புளொட் அங்கத்தவர்கள் கொந்தளிப்பான கடற்பயணத்துக்கு முற்றிலும் பழக்கமில்லாதவர்கள் என்பதால் தீவிரமான கடல் – நோய் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.

“ஒரு பருக்கை உணவைத்தானும் நாங்கள் வாயில் வைத்தால் அந்தக் கணமே நாங்கள் அதை வாந்தி எடுக்கலானோம்” என்றார் அந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்த ராகவன் என்பவர்.

நவம்பர் 2ல் நாங்கள் மாலைதீவை அடைவோம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக நாங்கள் நவம்பர் 3, அதிகாலை 4.00 மணியளவில் மாலைதீவை அடைந்தோம்.

கப்பல்களை கட்டுவதற்கு கப்பல்கட்டும் தளம் எதையும் எங்களால் காணமுடியவில்லை. இறுதியாக நள்ளிரவில் லுபுதி மற்றும் வசந்தி தலைமையில் இருந்த முதல் படகினை கரை சோக்க முடிந்தது.

வரும் போராளிகளைச் சந்திப்பதாக இருந்த லுபுதியின் ஆட்களை எங்குமே காணமுடியவில்லை. நாங்கள் சொன்ன தினத்தை தவற விட்டிருந்தபடியால் அநேகமாக அவர்கள் சென்றிருக்க வேண்டும் என்றார் ராகவன்.

ராகவன் சொன்னதின்படி உள்ளே வந்த குழுவுக்கு இராணுவ முகாமை நோக்கி முன்செல்வதைத் தவிர வேறு மாற்று வழி இருந்கவில்லை.

படகில் இருந்;து இறங்கும்போது அவர்கள் கொண்டு வந்திருந்த தொடர்பாடல் கருவி கடலுக்குள் விழுந்துவிட்டது.

இப்போது அந்தக் குழுவினருக்கு இரண்டாவது படகுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது ஸ்ரீலங்காவில் உள்ள தங்கள் தலைமையுடன் தொடர்பு கொள்ளவோ திறமையான தொடர்பாடல் வசதி எதுவும் இருக்கவில்லை.

IAF_IL-76_HawaiiAn Indian Air Force Ilyushin Il-76 transport aircraft of the model used to transport Indian paratroopers to Male

துறைமுகத்தை விட்டு வெளியேறும்போது, ஒரு தொகுதி காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகள் கண்களில் இந்தக் குழு தென்பட்டு விட்டது, அவர்கள் இந்தக் குழுவினரை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள்.

புளொட் அங்கத்தவாகளில் ஒருவர் அவர்களின் திசையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதனால் அந்த உத்தயோகத்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

எனினும் அந்த துப்பாக்கிச்சூடு இராணுவத்துக்கு எச்சரிக்கையை தெரிவித்துவிட்டது மற்றும் தாககுதலாளிகள் முகாமை அடைந்ததுமே எச்சரிக்கையுடன் இருந்த இராணுவ வீரர்கள் அவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

வசந்தி, மற்றும் இந்த திட்டம் பற்றிய முழு விபரமும் தெரிந்த ஆள் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூடடுக்கு இலக்காகி முதன்முதலில் இறந்தவர்களாக இடம் பிடித்தார்கள்.

இராணுவத்தினர் எச்சரிக்கை அடைந்தபடியால், அந்தக் குழவினரால் முகாமை கைப்பற்ற முடியவில்லை எனினும் அவர்களால் இராணுவத்தினரை முகாமுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்க முடிந்தது.

இந்த இடைநேரத்தில் இரண்டாவது குழுவினால் தங்கள் படகை கரைக்கு கொண்டுவர முடிந்தது மற்றும் அதே வளாகத்துக்குள் இருந்த தொலைத்தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையத்தை நோக்கி அவர்கள் முன்னேறினார்கள்.

பீற்றர் எனும் ஒரேயொரு அங்கத்தவரை மட்டும் இரண்டாவது படகில் தொடர்பாடல் வசதிக்காக நிறுத்தியிருந்தார்கள்.

மாலைதீவில் அன்றைய தினம் விடுமுறையாக இருந்ததால் தொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பாபுவின் குழுவினர் கண்டனர்.

அங்குள்ள இரும்புக் கதவுகள் தாக்குதல்காரர்கள் தாக்கிய வெடிமருந்துகளை தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருந்தன.

இதேநேரம் தொலைத்தொடர்பு மையத்தை பாபு துண்டிக்கவில்லை என்பதை அறியாத பாருக் மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி கையும் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்வதற்காக முன்னேறினார்கள்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்ட ஜனாதிபதியின் விபரமுள்ள பாதுகாப்பு பிரிவினர் அவரை அவரது வீட்டை விட்;டு வெளியேற்றி விட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சரும் மறைவாக ஒளிந்து கொண்டார். பாருக் மற்றும் அவரது குழுவினர் வந்தபோது பறவைகள் பறந்துவிட்டன. அவர்களைத் தேடிப்பார்த்தபோதும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையம் என்பன மீதான தாக்குதலை கேள்வியுற்ற ஜனாதிபதி கையும் அந்த வசதிகள் தாக்குதல்காரர்களின் கையில் விழுந்து விட்டது என்றே நினைத்தார்.

அதிர்ஷ்ட வசமாக காலை 7 மணியளவில்தான் தொலைத் தொடர்பு சேவை இன்னும் செயற்படுகிறது என்பதை அவர் கண்டு பிடித்தார்.

அவர் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களை தாக்குதலை முறியடிக்க உதவி கோரி அழைப்பை ஏற்படுத்தினார். ராகவன் சொல்வதின்படி டியாகோ கார்சியா தளத்திலிருந்த அமெரிக்க ஜெட் விமானம்தான் முதலில் வந்தது.

காலை 7.30 மணியளவில் அமெரிக்க போர் விமானம் அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டது, அதன் பின்னர் அது அது சென்றுவிட்டது.

இந்தக் கட்டத்தில் பாருக் மற்றும் ராகவன் ஆகியோர் தங்கள் திட்டம் தோற்றுவிட்டது என்பதை உணாந்தார்கள். அங்கிருந்து திரும்பவதற்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் எப்படி என்பதுதான் கேள்வி?

வசந்தியின் மரணத்துடன் திட்டம் தோல்வியுற்றால் திரும்பிச் செல்வதற்காக ஏதாவது எற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்பதை அவர்கள் அறிவது இயலாத காரியமாயிற்று.

“நாங்கள் தவிக்க விடப்பட்டோம” என்றார் ராகவன் – “தொடர்பாடல் எதுவும் இல்லை, 80 அங்கத்தவர்களையும் வெளியேற்றவதற்காக தொடர்பு கொள்ள வழி எதுவுமில்லை”. ஒரு அவசரத் திட்டத்தை செயற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,

ஒரு குழு ஒரு கப்பலை கடத்துவதற்காக துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது, ஒரு இரண்டாவது குழு பணயக்கைதிகளாக சிலரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

பிற்பகலளவில் முதலாவது குழு புரோகிரஸ் லைட் எனும் கப்பலைக் கைப்பற்றியது. அந்தக் கப்பலில் பணியாற்றிய குழுவினர் இந்தக் குழுவை ஏற்றிச் செல்ல சம்மதித்திருந்தனர்.

இரண்டாவது குழு மாலைதீவு அமைச்சர் மற்றும் அவரது சுவிஸில் பிறந்த மனைவி உட்பட குடிமக்கள் சிலரை பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டது.

“கிட்டத்தட்ட பி.ப 6.00 மணியளவில் துருப்புகளை ஏற்றிவந்த முதலாவது இந்திய விமானம் தரையிறங்கியது” என்று சொன்னார் ராகவன்.

“ எங்கள் அங்கத்தவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு செல்வதற்கு இதுதான் தக்க தருணம் என நாங்கள் அறிந்து கொண்டோம். இரண்டு மணித்தியாலங்களுக்குள் துருப்புக்களை ஏற்றிய மொத்தம் ஏழு விமானங்கள் தரையிறங்கின.

நாங்கள் மின் பிறப்பாக்கிகளை அணைத்து நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு அங்கிருந்து செல்லத் தயாரானோம். எங்களது அங்கத்தவர்களில் மூவர் மாலைதீவில் மரணமானார்கள்.

மீதமாக உள்ள எங்கள் அங்கத்தவர்கள் யாவரும் கப்பலில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் பின்னிரவு 12.30க்கு (4.11.1988) கப்பல் மாலைதீவினை விட்டு புறப்பட்டது.

மாலைதீவை விட்டு வெளிச்செல்லும் கப்பல்பாதை விமான நிலையத்தின் திசையில் சென்று அந்த இடத்தில் இருந்து படகுகள் சர்வதேச கடல்பகுதியை நோக்கித் திரும்புகின்றன.

தங்களது உண்மையான சேருமிடத்தை மறைப்பதற்காக குழு கப்பல் பணியாளர்களிடம் தாங்கள் இந்தோனசியாவின் திசையில் செல்வதாகச் சொல்லியிருந்தார்கள்.

கப்பல் விமான நிலையத்தை நோக்கித் திரும்பியபோது, இந்திய வீராகள் கிளர்ச்சிக்காரர்கள் தங்களை தாக்க வருவதாக நினைத்து கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள்.

எனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை மற்றும் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. இதே நேரம் மற்றொரு நாடகத்திற்கான திரை விலகியது.

முதலாவது வந்த குழு இராணுவ முகாமை தாக்கியபோது துப்பாக்கிச் சூடு ஆரம்பமானதும் பீற்றரும் அவரது தொடர்பாடல் கருவியும் இருந்த இழுவைப் படகில் பணியாற்றியவர்களிடம் அச்சம் குடிகொள்ளத் தொடங்கியது.

தங்களை போவதற்கு அனுமதிக்க முடியுமா என அவர்கள் வினாவினார்கள். இழுவைப் படகையும் அதன் பணியாளர்களையும் செல்ல பீற்றர் அனுமதியளித்தார். அவர் ஒரு சிறிய படகில் இருந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு தாக்குதலாளிகள் பின்வாங்கிச் சென்ற சிறிது நேரத்தின் பின்னும் பீற்றர் ஏதாவது சமிக்ஞையை எதிர்பார்த்து கடலிலேயே காத்திருந்தார்.

இறுதியாக 4.11.1988ல் தங்களது குழு மாலைதீவை கைப்பற்றிவிட்டது என்று நம்பி அவர் துறைமுகத்தை நோக்கிச் சென்றார், அங்கு அவருக்கு இந்திய துருப்புக்களால் சூடான வரவேற்பு வழங்கப்பட்டது,

அவாகள் அவரை விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் மட்டுமல்ல ஆனால் புளொட் குழுவின் ஒரு அங்கத்தவர் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

புரோகிரஸ் லைட் கப்பலில் இன்னும் சுவராஸ்யமான பல நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்திய போர் ஜெட் விமானம் புரோகிரஸ் லைட்டின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் ஒரு இந்திய யுத்தக்கப்பலை அதைப் பிடிக்கும்படி திருப்பி விட்டார்கள்.

யுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட்டை பிடித்ததும் அதன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் உண்டானது. பணயக் கைதிகளில் ஒருவர் கப்பலின் மேல்தளத்திற்கு இழுத்து வரப்பட்டார். யுத்தக் கப்பல் தனது வழியில் இருந்து மாறாவிட்டால் தாங்கள்.

அவரைக் கொல்லப் போவதாக அவரைக் கடத்தியவர்கள் அச்சுறுத்தினார்கள். அநேகமாக உயர் அதிகாரிகளுக்கு அறித்த பின்னராக இருக்கலாம் போர்க்கப்பல் தனது தடையை தளர்த்தி விலகியது ஆனால் அங்கிருந்து செல்லவில்லை.

ஆனால் புரோகிரஸ் லைட் ஸ்ரீலங்கா கடற்பரப்புக்குள் நுழைய முயற்சிக்கிறது என்பது தெளிவானதும் போர்க்கப்பல் விரைவாக முன்னுக்கு வந்தது. எச்சரிக்கை தெரிவிக்கும் விதத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கப்பலை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது.

புரோகிரஸ் லைட் தனது வேகத்தை குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாததால் யுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அது வேகமாக உடைந்து மூழ்கத் தொடங்கியது…. பணயக் கைதிகள், கடத்தல்காரர்கள், மற்றும் கப்பல் பணியாளர்கள் ஆகிய அனைவரும் இந்திய கடற்படை கப்பல் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

மாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி இந்தியாவின் தலையீட்டினால் திறமையாக முறியடிக்கப் பட்டது. 1989ல் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். நான்கு வருடங்களின் பின்னர்.

அவரைத் தொடர்ந்து புளொட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.சித்தார்த்தன், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த புளொட் அங்கத்தவர்களின் விடுதலைக்காக வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்தார்.

(நன்றி- தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்)

Share.
Leave A Reply