இந்தோனேசியாவின் பாலி நகரிலிருந்து டெல்லி சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட சோட்டா ராஜனை, ஐந்தடுக்கு பாதுகாப்பு போட்டு பத்திரமாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

ஆனால், அந்த நபர் உண்மையான சோட்டா ராஜன் இல்லை என்பதும், அவருக்கு பதில் பாதுகாப்பு கருதி டூப்போட்டு கொண்டு வரப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

நிஜமும் – நிழலும் என இரட்டை சோட்டா ராஜன்கள் கதை வெளியே தெரிந்து விட்டதால் பரபரப்பாகி கிடக்கிறது டெல்லி சி.பி.ஐ அலுவலகம்.

சோட்டா ராஜனின் உயிருக்கு தாவூத் கோஷ்டியினரால் அச்சுறுத்தல் இருப்பதால், சோட்டா ராஜனைப்போல இருந்த ஒரு நபரை கொண்டு வந்த சி.பி.ஐ போலீசார், உண்மையான சோட்டா ராஜனை போல டூப்ளிகேட் சோட்டா ராஜனை தயார் செய்து மீடியா மற்றும் போலீசார்களை ஏமாற்றிவிட்டு, இரண்டு பாதைகளை உருவாக்கி டூப்ளிகேட் சோட்டா ராஜனை ஒரு பாதை வழியாகவும், நிஜ சோட்டா ராஜனை வேறொரு பாதை வழியாகவும் கொண்டு சென்றுள்ளனர்.

உன்மையான சோட்டா ராஜன் எங்கே?

உண்மையான சோட்டா ராஜன் வேறு வழியில் மிகவும் கவனமாக பாதுகாப்பாக கொண்டு வரப்படார். அதோடு, சோட்டா ராஜனுக்கு சிறுநீரக பிரச்னை இருப்பதால் இன்று டயாலிசஸ் செய்யப்போவதால் இந்த ஏற்பாடு என்றும் சொல்லப்படுகிறது.

சோட்டா ராஜனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா இல்லை, வேறு ஏதும் சிறப்பு சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா என்பது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார்களுக்கே தெரியாமல் ரகசியமாக நடந்து வருவதாக சொல்லுகிறார்கள்.

தாவூத்தின் ஆட்கள் எந்த வழியில் வந்தாவது சோட்டா ராஜனை கொலை செய்யலாம் என்பதால் இந்த இரட்டை வேடம் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருப்பதாகவும் டெல்லி சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply