குடுப்பத்தில் தாய் தந்தையர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குடும்பத்துடன் இணைந்து வாழும் ஆசையை வெறுத்து திசை மாறிச் சென்ற 15 வயதுச் சிறுமியை ஏமாற்றி முஸ்லீம் மதத்தில் இணைத்து இரண்டாம் தாரமான அச்சிறுமியனை இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க தீட்டப்பட்ட சதித்திட்டம் பொலிஸாருடைய அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் கொடிகாமத்தில் இருந்து ஆரம்பித்து வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலைவரைச் சென்று மீண்டம் கொடிகாமத்தினை வந்தடைந்து திருநெல்வேலியில் முடிவடைந்துள்ளது.

கொடிகாமம் கெற்பலி – வாகையடி பளை வடக்கு என்றும் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியின் வீட்டில் தாய் தந்தையர்க்கு இடையில் தொடர்ந்து முரண்பாடுகள்.

இதனால் அவர்களுடைய குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற தாய் மன்னார் சிலாவத்துறைக்குச் சென்று அங்ள்ள வாடியில் வேலைபார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

தாய் பிரிந்து சென்ற போதும் தந்தை அச் சிறுமியையும், அவருடைய தம்பியையும் வளர்த்து வந்துதார். இருப்பினும் இரு பிள்ளைகளையும் அவர் சரிவர பராமரிப்பது இல்லை.

இதனால் குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பமே அந்த 15 வயதுச் சிறுமிக்கு இல்லாமல் போயிற்று.

இந்த விடயத்தினை பாடசாலை நண்பிகளிடமும் அச்சிறுமி பகிர்ந்து கொண்டுள்ளார். தூன் தற்கொலை செய்து சாகப் போவதாகவும் நண்பர்களிடம் அழுது புலம்பியுள்ளார்.

அவளுக்கு ஆறதல் சென்ன நண்பிகள் நீ சாக வேண்டாம் அம்மாவிடம் போ, அல்லது பராமரிப்பகங்களுக்கு சென்றுவிடு என்று தமது வயதிற்கு ஏற்ற அறிவுரைகளை செல்லியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலையில் வழமைபோன்று வீட்டில் தனது செயற்பாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கோவிலுக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டுப் போன அவர் மிருசுவில் பகுதியில் உள்ள தெரிந்த வீடொன்றில் துவிச்சக்கர வண்டியினை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் மன்னார் பஸ்சில் ஏறியுள்ளார்.

தாயை ஒருதடவை பார்ப்பதற்கான சென்ற அவருக்கு தனது வாழ்க்கையின் திசை மாறப் போகின்றது என்பது தெரியாமலேயே பஸ்சில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்.

பஸ் வவுனியாவினை சென்றடைவதற்குள் பஸ்சில் இருந்தவர்கள் பலர் இறங்கிவிட்டார்கள். வேறு பலர் பயணத்தினைத் தொடர்வதற்காகவும் பஸ்சில் ஏறினார்கள்.

இதற்கிடையில் கோவிலுக்குச் சென்ற தனது மகள் இரவாகியும் திரும்பி வராததை அடுத்து சிறுமியின் தந்தை அன்றிரவு 7.30 மணிக்கு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக் கொண்ட பொலிஸார் உடனடியாகவே வெளிமாவட்டங்களுக்கு குறித்த தொடர்பாக தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சேகமும், பயமும் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட அச் சிறுமிக்கு அருகில் முஸ்லீம் இனத்தினைச் சேர்ந்த 25 வயதினை மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வந்தமர்ந்துள்ளார்.

வவனியாவில் இருந்து சிறிது தூரம் பயணித்தவுடனேயே அந்த இளைஞர் சோகத்தில் மூழ்கியிருந்த அந்த சிறுமியிடம் மெல்ல கதைக்க ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய சோகத்தினை பகிர்ந்து கொள்வதற்கு யாரும் இல்லாமல் தனக்குள்ளேயே வைத்திருந்த சிறுமி தனது முழக்கதையினையும் அந்த இளைஞரிடம் கொட்டித்தீர்த்துள்ளார்.

சிறுமியின் சோகத்தினையும், ஆதரவற்ற நிலையினையும் கண்டு அவருக்கான புத்திமதிகளை கூறாமலும், சிறுமியின் தனது வாழ்வில் தொடரும் தவறான பாதை தொடர்பாக உரியவர்களுக்கு தெரியப்படுத்தாமலும் சிறுமியின் சோகத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளார்.

இதனால் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் பல கூறிய இளைஞர் தன்னுடன் வந்தால் புதியதொரு மகிழ்ச்சியான வழ்க்கையினை காட்டுவதாகவும் சிறுமிக்கு உறுதியழித்துள்ளார். வேறு வழியில்லாமல் சிறுமி அவருடன் சேர்ந்து போவதற்கு சமதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் மட்டக்களப்பு பஸ்சில் ஏறி பயணத்தினைத் தொடர்ந்துள்ளனர்.

இப் பயணத்தின் போது சிறுமியின் கையில் இருந்து ஆலய நுர்ல்களை அறுத்து எறிந்தும், சல்வாரின் தாவணியை மொட்டாக்காய் மாற்றி முஸ்லீம் பெண்ணைப் போல் அச் சிறுமியனை மாற்றியுள்ளார் அந்த இளைஞர்.

மறநாள் ஆதிகாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள தனது தாயாருடைய வீட்டிற்கு அச் சிறுமியை அந்த இளைஞர் கூட்டிச் சென்றுவிட்டார்.

ஆவருடைய வீட்டில் இருந்த தாயாரிடம் நடந்தவற்றினை எல்லாம் கூறிய அந்த இளைஞர் வீட்டிலேயே சிறுமியை வைத்துரப்போம் என்று தாயாரிடம் கூறியுள்ளார்.

வீட்டில் இருப்பதாக இருந்தால் முஸ்லீம் பாடசாலையில் அவள் கல்வி கற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தாயார் நிபந்தனை விதித்திருந்தார்.

தாயாருடைய நிபந்தனையினை அவ்விளைஞர் ஏற்றுக் கொண்ட போதும் அச் சிறுமி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

தான் முஸ்லீம் கல்வியினை கற்கப் போவதில்லை என்று விடாப்பிடியாக நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞருடைய தாயார் இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டார். எங்கு செல்வதென்று தெரியாமல் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் அவ்விளைஞர் தனது மனைவி பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்குச் இன்று ( 2 ஆம் திகதி ) இரவு விமானத்தில் பயணிப்பதாக கூறியது நினைவுக்கு வந்தது. ஊடனேயே அச் சிறுமியை அழைத்துக் கொண்டு திருகோணமலையில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

திருகோணமலை சென்ற அவர் விமான நிலையத்திற்கு நேரம் தாழ்த்திச் சென்ற காரணத்தினால் மனைவி வெளிநாடு செல்ல முடியாமல் வீடு திரும்பி வந்துவிட்டார் என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது.

தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வந்திருப்பதைக் கண்டு கோபங்கொண்ட மனைவி சத்தமிட ஆரம்பித்துள்ளார்.

சிறுமியால் தனது குடும்பத்திற்குள் பிளவு ஏற்படப் போகின்றது என்பதை சுதாகரித்துக் கொண்ட இளைஞர் திருகோணமலை பஸ்நிலையத்தில் குறித்த சிறுமி தனிமையில் நின்றிருந்தாகவும், பாவப்பட்டு அவரை கூட்டிவந்தாகவும் இளைஞர் புதக்கதை ஒன்றினை மனைவிக்குச் செல்லியுள்ளார்.

ஆனால் அச் சிறுமி நடந்த அனைத்து உன்மையினையும் அவ்விளைஞரின் மனைவிக்கு செல்லிவிட்டார். இதனால் சிறுமியின் தாந்தையாருடைய தொலைபேசி இலக்கத்தினை பெற்று அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

தந்தையுடன் அச் சிறுமியினை உரையாடவிட்டு தான் இருக்கும் இடத்தினையும் அடையாளப்படுத்திக் கொண்ட சிறுமி தன்னை வந்து கூட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது மகள் இருக்கும் இடத்தினை தெரிந்து கொண்ட தந்தை அத்தகவலை கொடிகாமம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உடனடியாகவே திருகோணமலைப் பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறுவர், பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி டபிள்யூ,ஜ.பி.ஜஸ்மின் காமியுடன் தொடர்பு கொண்ட கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம் சிந்திக்க பண்டார குறித்த சிறுமி தொடர்பான தகவலை தெரிவித்து விரைந்து சிறுமியினை பொலிஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

கொடிகாமம் பொலிஸாருடைய தகவலின்படி அங்கு சென்ற திருகோணமலைப் பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி எந்தவிதமான துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் சிறுமியின் தாயார் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடைபெற்ற விசாரணையில் சிறுமியை ஏமாற்றி கூட்டிச் சென்ற இளைஞருடைய மனைவியும் சேர்ந்து இச் சிறுமி திருகோணமலை பஸ் நிலையத்தில் தனிமையில் நின்றிருந்த போது தான்தான் அவரை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், இச் சம்பவத்தில் தனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் வாக்குமூலம் அழித்துள்ளார்.

விசாரணையின் முடிவடைந்ததும் திருகோணமலைப் பொலிஸார் அச் சிறுமியையும், சிறுமியின் தாயாரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கொண்டுவந்து  ஒப்படைத்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே குறித்த சிறுமிக்கு நடந்த விபரீதங்கள் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் பேற்றோருடைய பாதுகாப்பில் இருந்து சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்ற இளைஞரை விசாரணைக்கு வருமாறு கொடிகாமம் பொலிஸார் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமியும், சிறுமியின் குடும்பத்தினரும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டள்ளனர்.

இவர்களை நீதவான் விசாரணை செய்த போது குடும்பத்தில் உள்ள சீர்கோடுகள் தொடர்பாக சிறுமி நீதவானிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல், குடம்பத்தினருடன் இணைந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த சிறுமியியையும், சிறுமியின் தம்பியாரையும் சிறுவர் பாதுகாப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதீத அக்கறை காரணமாகவும், சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் பொலிஸார் அவரை நெருங்கும்வரைக்கும் பஸ் பயணத்தில் அதிக நேரத்தினை செலவிட்டதாலும் சிறுமியின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply