நீங்கள் என்னதான் பெண்களிடம் உறவில் நெருக்கமாக இருப்பதாக நினைத்தாலும் கூட, உண்மையாகவே நெருக்கமாக இருந்தாலும் கூட சில அந்தரங்கள் விஷயங்களை பெண்கள் ஆண்களிடம் இருந்து மறைக்க தான் செய்கிறார்கள்.
சொல்லப் போனால், அவர்களது தோழிகளுக்கு தெரிந்த விஷயங்கள் கூட உங்களுக்கு தெரியாது. ஆனால், உங்களை பற்றிய அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அவர்களது தோழிகளுக்கு தெரிந்திருக்கும்.
இதெல்லாம் பெண்களை பற்றி பெரும்பாலான ஆண்களுக்கே தெரியாத விஷயங்கள். மேலும், உடலுறவில் ஈடுபடுதல், உச்சம் அடைதல் என ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் இரகசியங்கள் சில இருக்கின்றன…..
தோழிகளுக்கும் தெரியும்
சில அந்தரங்க விஷயங்களை எல்லாம் கூட தங்களது நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. இதை அவர்கள் ஆண்களிடம் ஒட்டுமொத்தமாக மறைத்துவிடுகிறார்கள்.

இன்பம்
பெண்கள் சிலர் தங்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் அடையவில்லை என்றால் ஆண்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று போலியாக உச்சம் அடைந்தது போல நடந்துக் கொள்கிறார்கள்.
பெண்கள் சிலர் தங்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் அடையவில்லை என்றால் ஆண்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று போலியாக உச்சம் அடைந்தது போல நடந்துக் கொள்கிறார்கள்.
பெண்களுக்கும் ஆசைகள் உண்டு
உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்களை விட அதிகமான வேட்கை பெண்களுக்கு இருக்கும். ஆனால், இதை இந்திய பெண்கள் வெளிப்படுத்துவது இல்லை.
பொறாமை
காதலன் / கணவனாக இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் அழகு மீது பொறாமைப்பட வேண்டும். பெண்கள் தான் அழகு என்று அவர்கள் புகழ வேண்டும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். ஆனால், இதை பற்றி ஆண்களிடம் அவர்கள் மூசுக் கூட விடுவதில்லை.

சண்டைகள் வரும்
போது உங்கள் இருவருக்குள் சண்டை ஏற்படும் போது, மனதுக்குள்ளே அல்லது, அவர்களது நெருங்கிய தோழிகளுடன், உங்களையும் அவர்களது முன்னாள் காதலரையும் பற்றி ஒப்பிட்டு பேசும் பழக்கம் பெண்களிடம் இருக்கிறது. மற்றும் நீங்கள் அவர்கள் மீது அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ளும் போது அதையும் கூட ஒப்பிட்டு பேசுவார்கள்.
உடலுறவு
இன்றைய தலைமுறையினரிடம் திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதில் கசப்பான உண்மை என்னவெனில், இவர்களில் பெரும்பாலானோர் அவர்களையே திருமணம் செய்துக் கொள்வதில்லை. காதலிக்கும் போதே கருத்து வேறுபாடு நேர்ந்து பிரிந்துவிடுகிறார்கள்.

அந்தரங்க அழகு இரகசியங்கள்
அதிகமாக பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் அந்தரங்க இரகசியம் அவர்களது அழகு குறித்து தான். உலக அளவில் பெண்கள் ஆண்களிடம் தங்களுக்கு வேக்ஸ்சிங் பிடிக்காது என்று பொய் கூறுகிறார்களாம். இதுமட்டுமின்றி தலை முடியில் இருந்து கால் நகம் வரையிலும் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பது பல கணவன்மார்களுக்கு கூட தெரிவதில்லையாம்.
முன்னாள் காதல் கதைகள்
பெண்கள் சாகும் வரை கட்டிக்காக்கும் இரகசியங்களில் இன்று முந்தைய காதல் கதை. இதை அவர்களால் சாகும் வரையிலும் கூட மறக்க முடியாது. ஆண்கள் இதை சில சமயம் உளறிக்கொட்டி விடுவார்கள். ஆனால், பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சூதானமாக நடந்துக் கொள்வார்கள்.
செலவழிக்கும்
பணம் ஆண்களுக்கே தெரியாமல், பணத்தை சேமித்து வைக்கும் குணம் பெண்களிடம் இருக்கிறது. பாட்டி காலத்தில் இருந்து “பார்ட்டி” காலத்துக்கு மாறினாலும் கூட, ஆண்களிடம் இருந்து ஆண்களுக்கே தெரியாமல் பணத்தை சேமிக்கும் பெண்களின் திறமை இன்றளவும் எள்ளளவும் குறையவில்லை.