முஸ்லிம் பெரும்பான்மை மதச்சார்பற்ற நாடான துருக்கியின் வரலாற்றில் முதல்முறை பெண் நீதிபதி ஒருவர் இஸ்லாமிய பர்தா அணிந்து வழக்கு விசாரணையை நடத்தியுள்ளார்.
ஸ்தன்பூல் நீதிமன்ற அறையில் கறுப்பு அங்கி அணிந்த இளம் நீதிபதி ஒருவர் தலையை மறை க்கும் கறுப்பு பர்தா அணிந்து இருக்கும் புகை ப்படம் சமூகதளங்களில் பிரபலமடைந்துள்ளது.
இந்த புகைப்படத்திற்கு ஒருசில டுவிட்டர் பயனர்கள், “இஸ்லாமிய சட்டத்தின் பிரகடனம்” என்று கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் புகைப்படத்தில் இருக்கும் நீதிபதி மற்றும் அவர் விசாரித்த வழக்கு தொடர்பில் தெரியவரவில்லை.
பெண் நீதிபதிகள் மற்றும் அரச வழக்கறி ஞர்கள் பர்தா அணிவதற்கு இருந்த தடையை துருக்கியின் நீதிபதிகள் மற்றும் அரச வழக்க றிஞர்களுக்கான உச்சசபை கடந்த ஜ{ன் மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நீக்கி இரு ந்தது.
இஸ்லாமிய பின்னணி கொண்ட ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (ஏ.கே.பீ.) நாட்டில் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்டு வர முயற்சிப்பதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாடசாலை கள் மற்றும் அரச நிறுவனங்களில் பெண்கள் பர்தா அணிவதற்கு இருந்த தடையை துருக் கிய அரசு விலக்கியது.
எனினும் இந்த தடை நீக்கம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனினும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் பர்தா தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
எர்துகானின் ஏ.கே. கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மறு தேர்தலில் அமோக வெற்றியீட்டி தனது 13 ஆண்டு அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.
கடந்த யூனில் நட ந்த தேர்தலில் அந்த கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற தவறிய நிலையிலேயே மறு தேர்தல் இடம்பெற்றது.
First veiled female judge conducts trial in Turkey
A female judge wearing an Islamic headscarf has conducted a trial in Turkey for the first time in the history of the Muslim but secular state, media reports said Wednesday.
A picture of a young, black-robed judge wearing a dark-coloured headscarf in an Istanbul courtroom has been widely shared on social media, with some Twitter users denouncing it as “the declaration of Islamic sharia law”.
The judge was not identified and the details of the case she was hearing were not known.
Turkey’s Supreme Board of Judges and Prosecutors (HSYK) had lifted the ban on female judges and prosecutors wearing the Islamic headscarf just ahead of the June parliamentary election.
President Recep Tayyip Erdogan’s Islamic-rooted Justice and Development Party (AKP) has long been accused of seeking to force Islamic values on society.
Over the past two years, the government has lifted bans on women and girls wearing headscarves in schools and state institutions, moves denounced by opponents as undermining the basis of Turkey’s secular state.
The ban still remains in place for military and security personnel.
In a snap election on Sunday, the AKP recovered the parliamentary majority which it lost for the first time in 13 years in June.