அரிசோனாவில் சீர்திருத்த அதிகாரிகளை கைதிகள் அடித்து உதைத்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் அரிசோனாவில் உள்ள சிறை ஒன்றில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், உணவு உண்ணும் இடத்தில் கைதிகள் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது, அங்கு வந்த சீர்திருத்த அதிகாரிகள், அந்த அறையில் நடந்துகொண்டிருக்கையில், திடீரென 30 கைதிகள் சேர்ந்து மிளகு ஸ்பிரே மற்றும் துப்பாக்கிகளை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 7 அதிகாரிகளில் பெண் அதிகாரி ஒருவரும் அடங்குவார், மேலும் ஒரு அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டதால் அவரால் இன்று வரை பணிக்கு திரும்ப இயலவில்லை.
தற்போது சிறையில் நடைபெற்ற இந்த கலவரம் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.