பெரிய எதிர்பார்ப்புக்கிடைய பிகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதில்,ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் இறங்கின. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாரதிய ஜனதா கூட்டணி சார்பில், பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் இறங்கினர்.
ஆனால் தொடர்ந்து இந்த முன்னிலை நீடிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. பாரதிய ஜனதா கூட்டணி பின் தங்கியது.
4.30 மணி நிலவரம்
இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு 55 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நிதிஷ்குமாரின் தலைமைலான மகா கூட்டணி 44 தொகுதிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
5.00 மணி நிலவரம்
மாலை 5.00 மணிக்கு 77 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நிதிஷ்குமாரின் தலைமைலான மகா கூட்டணி 59 தொகுதிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களிலும், ஒரு இடத்தில் மற்ற கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணி நிலவரப்படி, பிகாரில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 122 இடங்கள் போதுமானது. தற்போது மெகா கூட்டணி 179 இடங்களை பெற்றிருப்பதால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகிறார்.
பீகார் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி- மீண்டும் முதல்வராக நிதிஷ்! பா.ஜ.க. படுதோல்வி!
பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.