காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் சிங்கப்புரில் இருந்து இன்று இரவு 9.10 அளவில் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாகவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

கோட்டே நாகவிகாரையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பௌத்த குருமார் உள்ளிட்ட விசாரணையின் போசகர்கள் இந்த கலந்துரையாடலின் ஈடுபட்டனர்.

இதேவேளை, காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் வானூர்தி தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இன்று இரவு இலங்கைக்கு எடுத்துவரப்படும் தேரரின் பூதவுடல் நாளை காலை விசேட வாகன பேரணியாக கோட்டே ஸ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலஞ்சென்ற 73 வயதான மாதுலுவாவே சோபித்த தேரர் இருதய சந்திரசிகிச்சை மேற்கொண்டதன் பி;ன்னர் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

119856_5119856_4

article_1446971132-aarticle_1446971142-b

article_1446971151-c

மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார்.
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sopithaகொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய சத்திரசிகிச்சை செய்து கொண்டதையடுத்து இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூரக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று அதிகாலையில் காலமானார்.

மாதுளுவாவே சோபித தேரர், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதற்கு பெரும் போராட்டங்களை நடத்தியவர் என்பதுடன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும், முக்கிய பங்காற்றியவர்.

Share.
Leave A Reply