அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ் சிய சாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்ப டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை வைத்து அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர்கள் பலரும் தமது கருத்துக்களை கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜேதாச – பொன்சேகா முறுகல் தொடர்வு; 50 கோடி கேட்டவரிடம் 500 கோடி கேட்க முடிவு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் 500 கோடி ரூபா இழப் பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவாங் கொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக உரிய முறையில் செயற்படவில்லை என கடந்த தேர்தல் நேரத்திலும் அதற்கு பின்னரும் பொன்சேகா தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால், ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் அவதூறுக்கு எதிராக 50 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யும் பணிகளை தனது சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த பொன்சேகா தனது ஓய்வூதியம் 50 ஆயிரம் ரூபா எனவும் 100 மில்லியன் ரூபா கேட்டாலும் தன்னால் செலுத்த முடியாது எனவும் கூறியிருந்தார். மேலும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் பணம் இல்லாததால், தான் அமைச்சரின் வீட்டுக்கு சென்று குடியேற நேரிடும். அப்போது அமைச்சர் தனக்கு உணவளிக்க நேரிடும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.