அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் பைக் பிலேஸ் மார்கெட்டின் பிரபலமான பகுதியான சூயிங் கம் சுவர் தற்போது 20 ஆண்டுகளின் பின்னர் சுத்தம் செய்யப்படவுள்ளது.

100 ஆண்டுகள் பழமையான இந்த மார்க்கெட்டின் சுவர் ஒன்றில், சுமார் 20 ஆண்டுகளாக இந்த வழியே செல்லும் மக்கள் தங்கள் வாயில் மென்று சாப்பிட்ட சூயிங்கத்தை வீசிச் சென்று வருகின்றனர்.

இதனால் அந்த சுவரே விதம் விதமான கலர் சூயிங்கம்களால் நிரம்பி காட்சியளிக்கிறது. சுமார் 6 அங்குல அளவுள்ள இந்த சுவரில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான சூயிங்கம்கள் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சுவர் பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பழமையான சுவரைப் பாதுகாக்கும் வகையில் அதிலுள்ள சூயிங்கங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வேலை சுமார் 4 நாட்கள் வரை எடுக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார நடவடிக்கையாகவும், சுவரைப் பாதுகாப்பதற்காகவும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டாலும், இது அச்சுவரின் இரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

உலகிலேயே அருவருக்கத்தக்கதாக கருதப்படும், இந்தச் சுவர் சுத்தம் செய்யப்படுவது குறித்து சமூகவலைதளப் பக்கங்களில் பலரும் தங்களது வேதனைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிலர் மீண்டும் இது போன்ற சுவர் உருவாக இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனக் கூறி, அந்த சுவரின் அருகில் புகைப்படம் எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply