புலோலியூரை வதிவிடமாக கருதப்படும் ஒரு முதியவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இணுவில் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் வசித்துவந்தார் அவரை அவ்வூர் இளைஞர்கள் செல்லமாக அடியவர் என்ற புனைப்பெயரில் அழைத்துவந்தனர்.
அது மட்டுமன்றி அவருக்கு வேண்டிய உடுதுணிகள், உணவுகளை சுழற்ச்சி முறையிலும் வழங்கிவந்தனர்.
பின் நாட்கள் செல்லச் செல்ல அவரது வயதின் காரணமாக பிணி பீடித்தது அதன் காரணமாக அவரை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
இளைஞர்கள் அனுமதித்த இருநாட்களுக்குள் அந்த முதியவர் கந்தனின் பாதாரவிந்தங்களில் சரணடைய இயற்கை எய்தினார்.
அம் முதியவர் உடலை பொறுப்பேற்பதற்கு ஒருவரும் முன்வராத காரணத்தால் இணுவை இளைஞர்கள் எல்லோருமாக சேர்ந்து அம்முதியவரின் உடலை பொறுப்பேற்று அம் முதியவரின் உடலுக்கு செய்யவேண்டிய கிரிகைகளுக்குரிய நிதிகளை தங்களுக்குள் சேகரித்து கிரிகைளை செவ்வனே செய்து முடித்துள்ளனர் .
இப்படிப்பட்ட இளம் சந்ததிகளும் நம் மண்ணில் உள்ளனர் என்னும் பொழுது பெருமையாக தான் உள்ளது. இவர்களை போன்ற பல இளைஞர்கள் இந்த மண்ணில் உதிர்க்க வேண்டும் மாற வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.