ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த வீடியோவில்,
ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கரை பெய்டர் லிலிட் பகுதியில் பாலஸ்தீனிய பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருக்கிறார்.
பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யிஷாய் கிரிடென் பெர்கர் என்ற இஸ்ரேல் வீரர் , அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார்.
அடையாள அட்டையை அந்த பெண் காட்டுகிறார். பின்னர் பாதுகாவலர் என்ன கூறினார் என தெரியவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது கைப்பையில் இருந்த கத்தியை எடுத்து பாதுகாவலரை மிரட்டி கத்தியால் தாக்க முயன்றார்.
இதில் பாதுகாவலர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் ஷாரி ஷிடெக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களால் அந்தப் பெண் சுடபட்டார். ஹில்வா சலிம் தர்வீஷ் என்னும் பெயர் கொண்ட அவர் மத்திய ஜெருசலேத்தில் உள்ள ஹடாஷ் பல்கலைக்கழக மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.