தனது மகளால் நாய்க் கூட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த வேளையில், பலகொல்ல பொலிசாரால் மீட்கப்பட்ட 73 வயது தந்தை இன்று (09) மரணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலகொல்ல, கென்கல்ல, பங்ஜபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எம்.ஜி. சுமதிபால என்பவரை 42 வயதான தனது ஒரே மகளே இவ்வாறு தனது தந்தையை நாய்க்கூட்டில் சிறை வைத்திருந்தார்.

dog-inside-father-outside-2
கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி குறித்த தந்தையை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற உதவியளித்தனர்.

பின்னர் குறித்த தந்தை, கண்டி நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ஶ்ரீநித் விஜேயசேகரவின் உத்தரவில், அம்பிட்டிய முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

dog-inside-father-outside-2
முதியோர் இல்லத்தல் இருந்த அவர், திடீரென சுகவீனமுற்று கடந்த 03 ஆம் திகதி கண்டி பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு மரணித்துள்ளார்.

dog-inside-father-outside-5தனது தந்தையை நாய் கூட்டில் அடைத்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply