இயற்கை எய்திய மாதலுவாவே சோபித தேரரின் தேகம், இன்று (09) காலை கோட்டே ஶ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரின் தேகம் இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (12) வரை மக்கள் அஞ்சலிக்காக கோட்டே ஶ்ரீ நாக விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை எய்திய மாதுலுவாவ சோபித தேரரின் தேகம் இன்று முற்பகல் தனியார் மலர்ச்சாலையிலிருந்து கோட்டே ஶ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரின் தேகத்திற்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பௌத்த மக்களிடத்தில் மாத்திரமன்றி அனைத்து மக்களிடத்திலும் கௌரவத்தினை பெற்றுகொண்ட மாதுலுவாவே சோபித தேரர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்டார்.

இயற்கை எய்திய மாதுலுவாவே சோபித தேரரின் தேகம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஶ்ரீ ஜயவர்த்னபுர கோட்டே பாராளுமன்ற திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

அன்னாரின் மறைவினையடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply