தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் “வேதாளம்” திரைப்பட தொடக்க விழாவின் போது யாழ் .திரையரங்கு வாயியில் “தல” ரசிகர்கள் வித்தியாசமானதொரு தொடக்கத்தை வழங்கியிருந்தனர்.

12227693_1245013338857562_5418573128393886563_nதீபாவளி, புதுவருட நாட்களில் தமது சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேசம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியான இன்றைய தீபாவளி நாளில் யாழ்.செல்வா திரையரங்கில் விசேட தேவையுடையவர்களை அழைத்துவந்த “தல” ரசிகர்கள், அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

12235033_1245013335524229_797554182655371619_nசினிமா கதாநாயகர்களின் கட்டவுட் வைக்கிறார்கள் , அதற்கு பாலபிஷேகம் செய்கின்றனர் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற இச் சூழலில் “தல” ரசிகர்களின் இந்த செயற்பாடு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply