தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் புத்தாடை அணிவித்து பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர் மக்கள்.
மறுபக்கம் வாயில்லா ஜீவனின் வாலில் பட்டாசுகளை கட்டி வெடிக்க வைக்கும் கொடுமையும் அரங்கேறியுள்ளது.
3 பேர் சேர்ந்து நாய் ஒன்றை பிடித்து அதன் வாலில் பட்டாசுகளை கட்டி தீ பற்ற வைக்கின்றனர். பட்டாசு வெடிக்கும் சத்தத்தை கேட்டு அந்த நாய் அலறிக் கொண்டு ஓடுகிறது.
இந்த கொடூரமான வீடியோ காட்சி தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.