ரீலில் மலர்ந்து, ரியலில் முறிந்த பல காதல் திருமணங்கள் திரையுலகில் நடந்துள்ளது. படப்பிடிப்பில் அறிமுகமாகி, திரைக்கதையோடு தனியாய் தங்கள் கதையையும் வளர்த்து காதலில் மலர்ந்து, ஊடகங்களுக்கு கிசுகிசுக்களையும், செய்திகளையும் வாரி வாரி வழங்கிய பிறகு. பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி திருமணம் செய்த இவர்களது உறவு எதிர்பாராமல் உடைந்துவிடுகிறது
அந்த உடைந்த உறவுகளும் கூட சில காலத்திற்கு சுட சுட ஊடகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, பல பிரபல திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் முறிவில் முடிந்திருக்கின்றன. அவர்களை பற்றி தான் இனி பார்க்கவிருக்கிறோம்…
அரவிந்த்சாமி – காயத்திரி
ராமமூர்த்தி இவர்களது 16 ஆண்டு கால திருமண பந்தம் கடந்த 2010 ஆண்டுடன் முற்றுப் பெற்றது. சமரசத்திற்கு இடமில்லாத வேறுபாடுகளைக் காரணம் காட்டி இவர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த ஜோடிக்கு ஆதிரா, ருத்ரா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
கமல்ஹாசன் – சரிகா
இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்களாக திகழ்ந்த இவர்கள் இருவரும். காதலித்த போதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணத்தினால் குழந்தைகளும் பிறந்தனர். பின்பு, திருமணமும் செய்துக் கொண்டனர். ஆனால், கடந்த 2002 ஆண்டு சரிகாவை விவாகரத்து செய்துவிட்டார் கமல். கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பிரபு தேவா – ராமலதா
பிரபுதேவாவும் ராமலாதவும் கடந்த 2011 ஆண்டு விவாகரத்து வாங்கிக்கொண்டனர். இவர்களது பிரிவுக்கு, நயன்தாரா தான் காரணம் என்று பலத்தரப்பட்ட மக்களிடையே செய்திகள் கிளம்பின. இதற்கு முன்பு தான் இவரது ஒரு மகன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜ் – லலிதா
குமாரி பிராகாஷ் ராஜ் மற்றும் லலிதா குமாரி கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களது விவாகரத்திற்கு காரணம். இவருக்கு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் இருந்த உறவு தான் காரணம் என்று கூறப்பட்டது.
ரகுவரன் – ரோகினி
ரகுவரனும், ரோகிணியும் நல்லபடியாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், ரகுவரனின் குடிப்பழக்கம் தான் இவர்களது பிரிவிற்கு காரணம் என்று கூறப்பட்டது. ரகுவரனை மிக விரும்பியவர் ரோகினி, விவாகரத்து கூட விரும்பாமல் தான் வாங்கினார் என்று கூறப்பட்டது. பின்பு குடிப்பழக்கத்தில் இருந்த மீண்டு வந்த தருணத்தில் தான் ரகுவரன் காலமானார்.