மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகாராதிபதியுமான மாது­லு ­வாவே சோபித தேரரின் இறுதிக்கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் இன்று பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம்­பெறு­கின்­றன.

கோட்டே நாக­வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே,

சோபித தேரர் கடந்த சில கால­மா­கவே இரு­தய நோய் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்பூர் மவுன்ட் எலி­சபெத் வைத்­தி­ய­சா­லையில் அதி­காலை 4.30 மணி­ய­ளவில் தனது 73ஆவது வயதில் கால­மானார்.

அவ­ரது பூத­வுடல் அன்­றி­ரவு இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு கோட்டே ஸ்ரீ நாக­வி­கா­ரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவ­ரு­டைய இறுதிக் கிரியை பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் நடைபெறுகின்­றது.

இன்று நடை­பெறும் அவ­ரது இறுதிச் சடங்­கு­களை பூரண அரச மரி­யா­தை­யுடன் இடம்­பெ­று­வ­துடன் இன்­றைய தினத்தை தேசிய துக்க தின­மா­கவும் அனுஷ்­டிக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

அதே­வேளை மாது­லு­வாவே சோபித தேரரின் மறைவை நாடு­பூ­ரா­கவும் உள்ள மக்கள் துக்க தின­மாக அனுஷ்டிக்கும் வகையில் நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் பெளத்த காவி நிற கொடி­களை பறக்­க­விட்­டுள்­ள­துடன் இன்­றைய தினம் நாட்டில் உள்ள மது­பான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்­தையும் மூடு­மாறும் அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதேபோல் பெளத்த பிரி­வினா பாட­சா­லைகள் மற்றும் ஸ்ரீ ஜெய­வர்­த­ன­புர கோட்டே பகு­திக்­கு­ரிய பாடசாலைகளும் மூடப்­ப­ட­வுள்­ளன. மேலும் கடந்த மூன்று நாட்­க­ளாக மக்கள் இறுதி அஞ்­சலி செலுத்தவந்தனர்.

மக்­க­ளுக்கு இன்று முற்­பகல் 11 மணி வரை மக்கள் அவ­ருக்­கான இறுதி அஞ்­ச­லி­களை செலுத்த அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி பிர­தமர் முன்னாள் ஜனா­தி­பதி உள்­ளிட்ட அனைத்து அர­சியல் தலை­வர்­களும், பிர­ப­லங்­களும் தேரருக்கு இறுதி அஞ்­சலி செலுத்­தினர். அதேபோல் பெரும்­தி­ர­ளான மக்கள் இறுதி அஞ்­ச­லியை செலுத்­தவும் வருகை தந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இன்று பிற்­பகல் 1 மணிக்கு நாக­வி­கா­ரையில் இருந்து கொண்­டு­செல்­லப்­படும் அவ­ரது உடல் ஊர்வ­லா­மாக எடுத்து செல்­லப்­பட்டு பாரா­ளு­மன்ற மைதா­னத்தை வந்­த­டையும் எனவும் மக்­களை இந்த ஊர்­வ­லத்தில் கலந்­து­கொள்­ளு­மாறும் நாக­வி­கரை நிர்­வாகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஊர்­வ­லத்தில் கலந்­து­கொள்ள முடி­யாத பொது­மக்கள் இன்­றைய தினம் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்ற மைதா­னத்தை வந்­த­டை­யு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் தனது உடலை தகனம் செய்ய முன்னர் தனது உடலில் இருந்து எடுக்­க­கூ­டிய உறுப்­பு­களை தானம் செய்ய தான் விரும்­பு­வ­தா­கவும் அவ­ரது கண் மற்றும் பயனுள்ள உறுப்புகளை உடலுறுப்பு தான சங்கத்திடம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீ நாகவிகாரையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநெறியில் உட்புகுத்தவும் அனைத்து நூதனசாலைகளிலும் புத்தகமாக வைக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனது இறுதிக் கிரியைகள் குறித்து முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்த சோபித்த தேரர்

Share.
Leave A Reply