டெல்லி அருகே தொழிலதிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்கவுனில் நேற்றிரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒருவரை சுடுவதற்காக விரட்டுகின்றனர்.

அந்த நபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். பங்க் அருகே இருந்த மரத்தில் மோதி அந்த நபர் கீழே விழுகிறார்.

ஆனால் விடாமல் பின்னாலேயே விரட்டி செல்லும் இருவரும் அவரை சுடுகின்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: NDTV

Share.
Leave A Reply