காதல் எழாத மனமே இல்லை இவ்வுலகில். ஆனால், அந்த காதல் கைக் கூடியதா அல்ல கைக்கூடிய பிறகு அவர்கள் இல்வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டினார்களா என்பது தான் கேள்வியே. எவ்வளவோ பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டு சில பல மாதங்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள்.இது சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பிரபலங்களின் வாழ்க்கையிலும் கூட நடக்கிறது.
காதலில் வெற்றிக் காண்பது மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றிகரமாக வாழ்ந்து காண்பிக்க வேண்டியது அவசியம். அப்படி காதலித்தது மட்டுமின்றி, வாழ்க்கையிலும் கூட வெற்றிகரமாக வாழ்ந்து காட்டிய பிரபலங்களை பற்றி இனிக் காணலாம்..
சூர்யா – ஜோதிகா
தினமும் திருஷ்டி சுத்தி போட வேண்டிய ஜோடி இவர்கள். சரியான ஜோடி பொருத்தம். ஆயினும் இவர்களது காதலுக்கு எடுத்தவுடன் சம்மதம் கிடைத்துவிடவில்லை. ஆயினும் இரு வீட்டாரின் ஒப்புதலோடு தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து கரம் பிடித்த காதல் ஜோடி இவர்கள்.
தினமும் திருஷ்டி சுத்தி போட வேண்டிய ஜோடி இவர்கள். சரியான ஜோடி பொருத்தம். ஆயினும் இவர்களது காதலுக்கு எடுத்தவுடன் சம்மதம் கிடைத்துவிடவில்லை. ஆயினும் இரு வீட்டாரின் ஒப்புதலோடு தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து கரம் பிடித்த காதல் ஜோடி இவர்கள்.
சுந்தர் சி – குஷ்பூ
சுந்தர் சி-யின் இயக்கத்தில் முறைமாமன் படத்தின் போது இவர்கள் இருவரும் காதலில் விழுந்தனர். குஷ்பூவுக்கு என்ன பிரச்சனை என்றாலும் பக்கபலமாக இருந்து உதவி வருபவர் சுந்தர் சி.
சினேகா – பிரசன்னா
திரையுலகின் மற்றுமொரு ‘கண்ணுப்பட போகுதய்யா’ ஜோடி சினேகா – பிரசன்னா.
சுஹாசினி – மணிரத்தினம்
இயக்கத்தின் மீது காதல் கொண்டிருந்த சுஹாசினி, இயக்குனர் மணிரத்தினம் மீதும் காதல் கொண்டார். எந்த சண்டை சச்சரவும் இன்றி வாழ்ந்து வரும் வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளுள் இவர்களும் அடங்குவர்.
ஹரி – ப்ரீதா
விஜயகுமார் மற்றுமொரு இயக்கனர் – நடிகை ஜோடி ஹரி மற்றும் ப்ரீதா. கரடுமுரடான இயக்குனர் ஹரி மனத்திலும் ரோஜா பூக்கும் என்பது இந்த காதலுக்கு பிறகு தான் தெரிந்தது.
விஜயக்குமார் – மஞ்சுளா
ப்ரீதா மட்டுமல்ல, இவரது பெற்றோரான மஞ்சுளா – விஜயகுமாரும் கூட காதலித்து கரம் பிடித்தவர்கள் தான் என்பது குறிப்பிடதக்கது.
எம்.ஜி.ஆர் – ஜானகி
தனது இறந்துப் போன முதல் மனைவியை போலவே சாயலில் இருந்ததால் படப்பிடிப்பில் கண்ட போதே தனது மனதை ஜானகி அம்மாவிடம் பறிகொடுத்தார் புரட்சி திலகம் எம்.ஜி.ஆர். பிறகு என்ன இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது திருமணத்தில் முடிந்தது.
தேவயானி – ராஜகுமாரன்
தனது இயக்குனர் மீது காதல் கொண்ட மற்றுமொரு நாயகி தேவயானி. அன்று முதல் இன்று வரை இவரது தோற்றம் மட்டுமல்ல, காதலும் கூட குறையவில்லை.
பாக்யராஜ் – பூர்ணிமா
நடிகை பூர்ணிமாவை தனது படத்திற்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துக் கொண்டார் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ்.
ரோஜா – செல்வமணி
தமிழில் அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி, தனது துணையாகவும் ரோஜாவை தேர்வு செய்துக் கொண்டார் ஆர்.கே. செல்வமணி
ரம்யா கிருஷ்ணன் – வம்சி
காதலின் போது சண்டையிட்டு இவர்கள் மாதக்கணக்கில் பேசாமல் எல்லாம் இருந்திருக்கிறார்கள் என ரம்யா கிருஷ்ணன் அவர்களே பேட்டியில் கூறியிருக்கிறார். இவர்கள் கடந்த 2003 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
ஸ்ரீப்ரியா – ராஜ்குமார்
80-களில் ரஜினி – கமலுடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து அசத்திய நடிகை ஸ்ரீப்ரியா. இவர் ராஜ்குமார் தென்னிந்திய நடிகரான ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.