ஜெனிவா: ஜெனிவாவின் சோத்பே ஏல நிறுவனம் வைரங்களில் மிக மிக அரிதான ப்ளூ டைமண்டை 48.5 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளது.
இந்த வைரக்கல் கிட்டதட்ட 35 முதல் 55 மில்லியன் டாலர்கள் வரை மட்டுமே ஏலம் போகும் என இந்நிறுவனம் நினைத்திருந்தது. 29.6 காரட் மதிப்புள்ள இந்த வைரம், தென் ஆப்பிரிக்காவின் ப்ரிடோரியா நகருக்கு அருகேயுள்ள கல்லினன் வைரச் சுரங்கத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோண்டி எடுக்கப்பட்டது.
12-1447305837-blue-moon-diamond577

ஜெனிவாவில் ஏலம்: குறைபாடில்லாத இந்த நீல நிற அரிய வைரம் ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது.

12-1447305847-blue-moon-diamond546

320 கோடிக்கு விற்பனை: கடும் போட்டிக்கிடையே ஏலக் கட்டணத்துடன் சேர்த்து 48.4 மில்லியன் டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் 320 கோடியே 45 லட்ச ரூபாய் இந்த வைரம் ஏலம் போயுள்ளது.
12-1447305981-blue-moon4366

முறியடிக்கப்பட்ட சாதனை: 5 வருடங்களுக்கு முன்பாக தி கிராஃப் பிங் என்ற வைரம் 46 மில்லியன் டாலருக்கு விலை போனதே இதுவரை வைர ஏலத்தில் சாதனையாக இருந்த நிலையில் ப்ளூ டைமண்ட் 48.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

Share.
Leave A Reply