பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

151114111706_paris_6_624x351_reuters_nocredit
பாரிஸ் தாக்குதல்களில் ஏராளமானோருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த வன்செயல்கள் ஐ எஸ் அமைப்பால் தொடுக்கப்பட்ட ஒரு போர் என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் வர்ணித்துள்ளார்.

அவர்களுக்கு இத்தக்குதல்களுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன என்றும் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.

151114113321_paris_police_getty_624x351_getty_nocredit
நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்களை அடுத்து அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

பாரிஸில் ஆறு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், தற்கொலை குண்டுதாரிகள் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வளாகம் ஒன்றில், குண்டுதாரிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

151114102045_paris8_624x351_afp_nocredit
உயிரிழந்தவர்களுக்கு தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிரியாவில் பிரான்ஸ் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கான தண்டனையே இத்தாகுதல்கள் என தாக்குதல்களை நடத்தியவர்கள் கத்தினார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.

முன்னதாக துப்பாக்கித்தாரிகள் அருகாமையிலுள்ள உணவு விடுதிகளில் கண்மூடித்தனமாக பலரைச் சுட்டுகொன்றனர்.

151114095507_paris4_624x351_getty_nocredit
பலர் மிக அருகிலிருந்து சுடப்பட்டுள்ளனர்.

வேறு சிலர் பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கத்துக்கு வெளியே குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அந்த அரங்கத்தில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியொன்றை அதிபர் ஒலாந் பார்த்துக் கொண்டிருந்தார்.

article_1447507481-43333

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கான பொறுப்பை ஐஎஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்று ராயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தவேண்டியது தமது அதியுச்ச இலக்காக இருந்தது என்றும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கைக்கு இது பதிலடியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பரிஸ் நகரத்தின் மையப்பகுதியில் தாக்குதல்களை நடத்துவதற்கு ஆயுதங்கள், தற்கொலை பெல்ட்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளுடனும்  எங்கள் குழுவினரை அனுப்பி வைத்தோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி பிரங்கொய்ஸ் ஹொலாந்தே,  இந்த சம்பவமானது ‘யுத்தத்தை அறிவிக்கும் தாக்குதல்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply