கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடு குளத்தில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 37 வயதுடைய சின்னத்தம்பி ஜோகலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று மாடு கட்டச் சென்றதில் இருந்து காணாமல் போயிருந்தார் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததாக தெரிய வருகிறது.

அத்தோடு சடலம் கிளிநொச்சி பொதுவைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான இரணைனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கிறது.

எனவே அதிகரித்த நீர் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஐந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

body_iranaimadu_01body_iranaimadu_03

Share.
Leave A Reply