சிறுமி ஒருவருடன் தகாத உறவைப் பேணி அவரைத் தாயாக்கியதாக கூறப்படும் 47 வயதான கசிப்பு விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தங்கொடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ – மோருக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் கசிப்பு விற்பனை செய்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு 14 வயதாக இருந்த போது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் அங்கு சென்ற சந்தேகநபர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதோடு அதன் பலனாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

அந்தக் கருவை கலைத்திட இருவரும் யாருக்கும் தெரியாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து தொடர்ந்தும் சிறுமியுடன் சந்தேகநபர் உறவைப் பேணியுள்ளார். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இது குறித்து தெரிந்ததும் இருவரும் குளியாபிடிய – இலுக்கேன பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுகவீனமடைந்த சிறுமியை குளியாபிட்டி வைத்தியசாலையில் கடந்த 9ம் திகதி அனுமதித்துள்ளனர்.

இதன்போது அவர் கர்ப்பிணியாகவுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமி ஒருவர் கர்ப்பமாகவுள்ளமை தொடர்பில் வைத்தியசாலை தரப்பினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி சந்தேகநபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply