பயங்கரவாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரான்ஸ் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள அனுதாப கடித்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கேள்வியுற்றதும் நான் அதிர்ச்சிக்குள்ளாகினேன். பயங்கரவாதத்தின் கொடுமையை அதனை உணரந்த மக்களுக்கு மாத்திரமே தெரியும். இன்று பிரான்ஸ் எத்தகைய பிரச்சினையை எதிர்நோக்கியிருக்குமென இலங்கை மக்களுக்கு நன்றாக தெரியும்.

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத்தை நானும் அரசாங்கமும் இல்லாது ஒழித்தோம். பயங்கரவாதம் மீண்டும் தலைதுக்கக் கூடாது என்றே அதனை முற்றாக ஒழித்தோம். அதன்படி இன்று எமது நாட்டு மக்கள் அமைதியான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி துன்பத்திற்கு உள்ளாகியுள்ள பிரான்ஸ் மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் பிரான்ஸ் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதனை முழு உலகிற்கும் எடுத்துக் காட்டியுள்ளது. என மஹிந்த அந்த கடித்தில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply