தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் உறவினரும் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான சதீஸ்குமார் என்பவர் அரச அமைச்சு பதவிகள் அனைத்திலும் இருந்து தூக்கி விசபட்டுள்ளார்.

இவரை அண்மையில் கைதுசெய்யுமாறு பிரித்தானியப் புலனாய்வுப் பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே மைத்திரி அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்ததாக இலங்கை புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும், மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இருந்த சிவலிங்கம் சதீஷ்குமார் பிரித்தானிய விசேட பொலிஸ் பிரிவினரின் உத்தரவுக்கமைய இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை அரசு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவருடைய அமைச்சு பதவிகளை இரத்து செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சுமார் இரண்டு கோடி ரூபாய்களை பிரித்தானிய வங்கி ஒன்றில் இருந்து திருடி தனது இலங்கை வங்கி கிளைக்கு மாற்றி அந்த பணத்தை பதுக்கியது தொடர்பாக பிரித்தானிய உளவுத்துறையினரும் அவுஸ்திரேலிய உளவுத்துறையினரும் இணைந்து நடாத்திய விசாரணையின் போது இந்த திருட்டு சிவலிங்கம் சதீஸ்குமாரினால் மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இலங்கையில் குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த வாரம் இவரை கைது செய்ததுடன் இவருடைய உறவினர் முறையான தப்பியார் ஒருவரும் பிரித்தானிய விசேட உளவுத்துறையினால் பிரித்தானியாவில் கைது செய்யபட்டுள்ளார்.

satheeskumar_01
அவுஸ்திரேலிய நாட்டு கோடீஸ்வரர் ஒருவரின் வங்கி அட்டையை திருடி அந்த வங்கி அட்டை ஊடாக குறித்த கோடிஸ்வரனின் வங்கிக் கணக்குகளுக்குள் திருட்டுத்தனமாக புகுந்த சதீஸ் கும்பல் குறித்த வங்கி கணக்கில் இருந்து 2 கோடியை இலங்கையில் உள்ள சதீஸ்குமாரின் வங்கி கணக்குக்கு மாற்றி இலங்கையில் அந்த பணத்தை எடுத்து பதுக்கியுள்ளனர்.

இதனை விசாரணை செய்த பிரித்தானிய உளவுத்துறையினர் இன்ரபோல் எனப்படும் சர்வதேச பொலிசார் ஊடாக இலங்கையில் உள்ள சதீஸ்குமாரை இலங்கை உளவுத்துறையின் உதவியுடன் கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 2 கோடி பணத்தை மீட்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகளும் புலி ஆதரவாளர்கள் மட்டுமே வங்கி மட்டை மோசடி ஆட்கடத்தல் போதைவஸ்து வியாபாரம் என்று மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சட்டபட்ட நிலையில் தற்போது இலங்கை அரச அதிகாரிகள் இதனை செய்தமை உறுதிபடுத்தபட்டுள்ளதாக சர்வதேச உளவுத்துறை வட்டாரங்கள் சுட்டி காட்டி உள்ளன.

satheeskumar_02
இந்த செய்தியை இலங்கையில் உள்ள அனைத்து ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துள்ளபோதும் பிரித்தானிய உளவுத்துறையினரதும் இலங்கை உளவுத்துறையினரதும் துணையுடன் நாம் இந்த செய்தியை இலங்கையில் NEWJAFFNA இணையம் ஊடாக பகிரங்கபடுத்தி இருந்தோம்.

satheeskumar_03இதனை தொடர்ந்து இலங்கை அரசு கள்ள மட்டை திருடன் சதீஸ்குமாரை தனது அரச செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து தற்போது இடை நிறுத்தியுள்ளது.

satheeskumar_04

எனினும் இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் அவர்களை பிரித்தானிய உளவுத்துறை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் எனவும் இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் இலங்கையர்கள் தண்டிக்கபடுவார்கள் எனவும் பிரித்தானிய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளது.

பிரித்தானியா நோர்வே உட்பட ஜரோப்பிய நாடுகளில் திருட்டு வங்கி அட்டை மோசடி முறையில் பணங்களை திருடி இலங்கையில் முதலிடுவோர் தொடர்பாக தீவிரமாக ஜரோப்பிய உளவுத்துறை வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இத்தகைய செயலில் ஈடுபடும் பலர் மிக விரைவில் ஜரோப்பாவிலும் இலங்கையியிலும் கைது செய்யபட உள்ளதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் ஊடாக தெரிய வருகின்றது.

satheeskumar_05satheeskumar_06

Share.
Leave A Reply