வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் பாதிப்படைந்துள்ளது.

வவுனியா- சிதம்பரபுரம் வீதியில் சமனங்குளம், செட்டிகுளம்- பூவரசன்குளம் வீதி, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதி, மன்னார் வீதி- செட்டிகுளம் வீதியில் சின்னசிற்பிக்குளம் ஆகிய வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்து வருவதனால் அப் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்வதால் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து சில குளங்கள் உடைப்பெடுக்க கூடிய நிலையிலும் காணப்படுகின்றது. மீள்குடியேறிய நிலையில் நிரந்தர வீட்டுத்திட்டம் இன்றி வாழும் மக்கள், பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் ஆகியோரும் கடும் மழையால் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, மன்னகுளம் பகுதியில் 7 குடும்பங்கள் மழை காரணமாக முழுமையாக பாதிப்படைந்துள்ளனர். மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

sa21-1024x768sa31-1024x768

Share.
Leave A Reply