மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­ யப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்கும் ஏனை­யோரை பிணையில் விடு­தலை செய்­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

நேற்­றி­லி­ருந்து எதிர்­வரும் பத்து தினங்­க­ளுக்குள் இதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்­பாக பிர­தமரின் செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்­தி­லேயே இத்­தீர்­மானம் எடுக்கப்­பட்­டுள்­ளது.

பிர­தமரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், சட்டம் ஒழுங்கு அமைச் சர் சாகல ரத்­நா­யக்க ஆகியோர் தலை­மையில் நேற்று பிற்­பகல் விசேட கூட்டம் நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத், சிறைச்­சாலைகள் ஆணை­யாளர் ரோஹண புஷ் ப­கு­மார உட்­பட பல்­வேறு முக்­கிய அதி­கா­ரிகள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இக்­கூட்­டத்தில் தமிழ் அர­சியல் கைதி­க ளின் கோரிக்­கைகள் தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. தற்­போது அவர்கள் மேற்­கொண்­டுள்ள சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டம் தொடர்­பா­கவும் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டது.

அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் சமர்ப்­பிக்­கப்­பட்ட கைதிகள் தொடர்­பான விப­ரங்கள், கோப்­புக்கள் தொடர்­பா­கவும் ஆராயப்பட்­டது. அத­னை­ய­டுத்தே மேற்­கண்ட தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து நேற்று மாலையில் அமைச்­சர்­க­ளான டி.எம்.சுவா­மி­நாதன், சாகல ரத்­நா­யக்க மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளிட்டோர் மகசின் சிறைச்­சா­லைக்கு நேர­டி­யாக விஜயம் செய்து குறித்த தீர்­மானம் தொடர்­பாக உண்ணாவிரதப்போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள கைதி­க­ளி­டத்தில் தெளிவாக எடுத்­து­ரைத்­தனர்.

எனினும் கைதிகள் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கைவி­டு­வது குறித்து எவ்­வி­த­மான கருத்­துக்­களை வெளியிட்­டி­ருக்­கா­த­தோடு இத் தீர்மானம் குறித்து உரிய பதிலை சிறைச்­சாலை ஆணை­யாளர் ரோஹண புஷ்­ப­கு­மார ஊடாக விரைவில் அறி­விப்­ப­தாக குறிப்­பிட்­டனர்.

இத­னை­ய­டுத்து அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்­கி­ருந்து வெளியே­றி­னர்.

அதன் பின்னர் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கையில்,

என்­னிடம் சிறைச்­சாலை அமைச்சு ஒப்­ப­டைக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து தமது விடு­தலை குறித்து போராட்­டத்தை ஆரம்­பித்துள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக முனைப்­புடன் செயற்­பட்டேன்.

அதன் பிர­காரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக முதற்­கட்­ட­மாக 32பேருக்கும் அதனை தொடர்ந்து 30பேருக்­கு­மாக 62பேருக்கு பிணை­ய­ளிப்­ப­தாக உறு­தி­வ­ழங்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் சில கால­தா­மங்கள் காணப்­பட்­டி­ருக்­கின்­ற­போதும் தற்­போ­து­வ­ரையில் 39பேருக்கு பிணையில் செல்­வ­தற்­கான அனும­தியை புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது. பிணை வழங்­க­வேண்­டிய நிலையில் 23பேர் உள்­ளார்கள்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் 124பேருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது வரையில் 99 அரசில் கைதிகள் தமக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கு­மாறு விருப்பம் தெரி­வித்து கடி­தங்­களை கைய­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்கும் ஏனை­யோரை பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கு­மு­ரிய நட­வ­டிக்­கையை எதிர்­வரும் 10நாட்­க­ளுக்குள் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இவ்­வி­டயம் குறித்து அர­சியல் கைதி­க­ளி­டத்தில் தெரி­வித்­துள்ளோம் என்றார்.

சுமந்திரன் கருத்து

அதே­நேரம் இவ்­வி­டயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்கின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­விக்­கையில்,

99பேர் தமக்கு புனர்­வாழ்­வ­ளிப்­பற்­கான விருப்­புக்­களைத் தெரி­வித்து கடி­தங்­களை கைய­ளித்­துள்­ளனர். இவர்­களில் 14பேர் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்­க­ளா­க­வுள்­ளார்கள்.

அவர்­கர்­களை தவிர்த்­துப்­பார்க்­கையில் மேல் நீதி­மன்றில் வழக்­குள்ள 85பேர் புனர்­வாழ்வு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­து­மாறு கோரியுள்ளனர். அக்­கோ­ரிக்­கையை சாத­க­மாக பரி­சீ­லிப்­போ­மென அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது.

அது­மட்­டு­மன்றி அவ்­வாறு சாத­க­மாக பரி­சிப்­ப­தோடு அவ்­வாறு புனர்­வாழ்­வ­ளிக்கும் குழுவை இன்­றி­லி­ருந்து (நேற்­று­முதல்) பத்து நாட்களுக்குள் முதற்­கட்­ட­மாக அனுப்­பி­வைப்­ப­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளார்கள். இவ்­வி­ரண்டு வாக்­கு­று­தி­க­ளையும் நாம் அர­சியல் கைதி­க­ளி­டத்தில் குறிப்­பிட்­டுள்ளோம்.

இதே­வேளை அர­சாங்கம் குறிப்­பிட்ட 62பேரில் 39பேருக்கு தற்­போது வரையில் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. எஞ்சிய 23பேரில் உயர் நீதிமன்றில் வழக்குள்ளவர்களுக்கே பிணை வழங்கப்படவுள்ளது. அந்த நடவடிக்கைகளையும் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நாம் பொதுமன்னிப்பை கோரிய போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாமாவே புனர்வாழ்வுக்கு விருப்பைத் தெரிவித்துள்ள போதும் அதற்கும் அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காதுள்ளதென்றே கைதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இவ்வாறான நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கைக்கு சாதகமானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது என்றார்

நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம்! உங்களுக்காகப் போராடுவோம்: மகஸின் சிறையில் வடக்கு முதல்வர் உணர்வுபூர்வ உரை

“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துவருவதையறிந்து அவர்களை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை அவசரமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து நண்பகலளவில் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் உண்ணாவிரதிகளைச் சந்தித்து உரையாடினார்.

“உங்களுடைய விடுதலைக்காக வடக்கு கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அளவிலான ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். உங்களுடைய விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதை இதன் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம். இது ஆரம்பம். எமது இந்தப் போராட்டம் தொடரும்.

உங்களுடைய போராட்டம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் நான் கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். தொடர்ந்தும் அதனைத் தெரியப்படுத்துவேன். இதன் மூலமாக உங்களுடைய பிரச்சினை தொடர்பில் அவர்களும் அக்கறை கொண்டுள்ளார்கள்.

உங்களுடைய நிலை மிகவும் மோசமடைந்துவருவதை அறிந்துதான் நான் இன்று இங்கு வந்தேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று நான் உங்களைக் கோரவில்லை. ஆனால், உங்களுடைய உடல்நிலை மோசமடைந்துவருவதால், உங்களுக்காக நாம் சிறைக்கு வெளியே போராடுவோம் என்ற உறுதியை நான் வழங்குகின்றேன். அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்றுதான் நான் கேட்கின்றேன்.

ஜனாதிபதியுடன் உங்களுடைய பிரச்சினை குறித்து நான் பேசியுள்ளேன். இன்று அவர் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார். இன்று மாலை அது குறித்து தெரியவரும். எப்படியிருந்தாலும், உங்களுடைய விடுதலைக்காக உங்களுக்காக சிறைக்கு வெளியே நாம் போராடுவோம்” என முதலமைச்சர் உணர்வுபூர்வமாக இங்கு உரையாற்றினார்.

முதலமைச்சருடன் சட்டத்தரணி இரத்தினவேல் உட்பட மற்றும் சிலரும் சென்றிருந்தார்கள். உண்ணாவிரதக் கைதிகளின் நிலையையும் பார்வையிட்ட முதலமைச்சர், கைதிகளின் விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் உரையாடினார்.

Share.
Leave A Reply