ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) பி.ப. 2.30 மணியளவில் ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்ட நேரக்கண்காணிப்பாளர் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு விரைந்த ஹட்டன் பொலிஸாரால் குறித்த நபர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், குறித்த நபர் மரணமடைந்ததாக வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மன்ராசி, ஆகரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கொழும்பு செல்வதற்காக ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் அமர்ந்திருந்த நிலையில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.