ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது “Islamic State in Iraq and the Levant” என்பதன் சுருக்கம் ஆகும். ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.
ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் கொள்கை.
ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இந்த குழுவானது ஈராக் போரின் போது உருவானது. இது சுணி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதியில் கலிபா ஆட்சியை உண்டாக்கி, பிறகு அந்த ஆட்சியை சிரியா வரை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் அல்-கொய்தாவுடன் கூட்டு வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.. கடந்த 2014 ஆண்டு உறவை முறித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது…
உலகளவில் ஆட்கள் சேர்ப்பு சமூக ஊடகங்களின் வழியாக கடந்த சில வருடங்களாக உலகளவில் பெரும் ஆட்-பலத்தை சேர்த்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த வருடம் மட்டுமே 20,000க்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ஜெர்மனி என 90 வெவ்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் இணைந்துள்ளனர்.

மனித வரலாற்றை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.
வரலாற்று புகழ்பெற்ற இடங்களை அழிப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவரை விலைமதிப்பற்ற நிறைய இடங்களை நாசமாக்கி உள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். யுனெஸ்கோவின் உலக மரபு தளங்களை கூட இவர்கள் குறிவைத்து தாக்குகிறார்கள்.

அல் கொய்தாவை விட மோசமாக செயல்பாடு
உலக நாடுகள் அல் கொய்தா தான் மிகவும் அச்சுறுத்தும் வகையில் தீவிரமாக செயல்பட கூடிய அமைப்பாக இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அவர்களுக்கு இணையாக மட்டுமின்றி, அதற்கும் மேலாக தீய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என கூறுகின்றன.

தலையை துண்டித்தல்
பிணைக்கைதிகளாக பிடிக்கப்படும் அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு தான் கொல்லப்படுகிறார்கள். தலையை துண்டிப்பது என்பது இவர்களது அடையாள செயல்பாடாக இருந்து வருகிறது. மேலும் இதை காணொளியாக பதிவு செய்து பரப்பியும் வருகிறார்கள்.
ஊடக நுட்பம் அறிந்த தீவிரவாதம்
ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடகத்தை சரியாக பயன்படுத்தி வருகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ச்டாக்ராம் போன்ற சமூக இணையங்களில் இவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதை பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், செயல்பாடுகள், செய்திகள் போன்றவற்றை பெரும் பகுதியினரிடம் எளிதாக சென்றடைய இவர்கள் வழிவகுக்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பணவரவு
பணக்கார ஆதரவாளர்களிடம் இருந்து நன்கொடையாகவும், சில கொள்ளை சம்பவங்களில் கொள்ளையடித்த பணத்தையும் வைத்து இவர்கள் இயங்கி வருகிறார்கள். குறைந்தது மில்லியன் டாலர்கள் வரை இவர்களுக்கு தினமும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து நிதியுதவி வந்தவண்ணம் உள்ளது.

பேரழிவை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள்
ஒருபுறம் இவர்களை மேற்கத்திய நாடுகள் உலகை அழிக்க பேரழிவை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அவர்களுக்கான உரிமை போர் இது என்று விளக்கமளிக்கிறார்கள். ஆனால், இதற்கு மத்தியில் அப்பாவி மக்கள் தான் அதிகம் உயிர் இழக்கிறார்கள்.