13276_37

பிர­பல கால்­பந்­தாட்ட வீராங்­க­னை­யொ­ருவர் ஆண் போன்று வேட­ம­ணிந்­து­கொண்டு ஆண்கள் அணி­யொன்றில் போட்­டியில் பங்­கு­ பற்றியபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்­க­ளையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் வியப்­பி­லாழ்த்­தி­யுள்ளார்.

ஸ்பெய்னைச் சேர்ந்த பிரெண்டா பெரெஸ் எனும் இந்த வீராங்­கனை, ஆண்­க­ளுக்கு இணை­யாக பெண்­க­ளாலும் கால்­பந்­தாட்­டத்தில் பிர­கா­சிக்க முடியும் என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக இவ்­வாறு மாறு வேடத்தில் விளை­யா­டி­யுள்ளார்.

21 வய­தான பிரெண்டா பெரெஸ், ஸ்பெய்னின் தொழில்சார் கால்பந்தாட்ட வீராங்­க­னை­களில் ஒருவர்.

virar

ஸ்பெய்னின் ஸ்பானியோல் மற்றும் வெலன்­ஸியா கழ­கங்­களின் மகளிர் அணி­க ளின் சார்பில் விளை­யா­டி­யவர் இவர்.  அண்­மையில் ஆண் போன்று வேட­ம­ணிந்து ­கொண்டு ஆண்கள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் இவர் பங்கு­­பற்­றினார்.

“எல் ஹோர்­மி­கு­வேரோ” எனும் ஸ்பானிய தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்­றுக்­காக ஒரு சமூக பரி­சோ­த­னை­யாக ஆண் வேடத்தில் பிரெண்டா பெரெஸ் போட்­டியில் பங்­கு­பற்­றினார்.
1327635
இடது: பிரெண்டா பெரெஸ், வலது: டெனி பெரெஸ் எனும் ஆணாக

லீக் நிலையில் இல்­லாத  ஆண்கள் கழ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இப்­போட்­டிக்­காக பிரெண்டா பிரெ­ஸுக்கு 7 மணித்­தி­யா­லங்­க­ளாக மேக் அப் செய்­யப்­பட்­டது. ஆண் முகம் போன்று முக­மூ­டி­யொன்றை அணிந்­தி­ருந்த அவர் தாடி­யுடன் காணப்­பட்டார்.

லீக் நிலையில் இல்­லாத  ஆண்கள் கழ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இப்­போட்­டிக்­காக பிரெண்டா பிரெ­ஸுக்கு 7 மணித்­தி­யா­லங்­க­ளாக மேக் அப் செய்­யப்­பட்­டது. ஆண் முகம் போன்று முக­மூ­டி­யொன்றை அணிந்­தி­ருந்த அவர் தாடி­யுடன் காணப்­பட்டார்.

1327642
இப்­போட்­டியில் பங்­கு­பற்­றிய மத்தியஸ்தர், பிரெண்டாவின் கழகத்தின் முகா­மை­யா­ளர் ஆகியோருக்கு மாத்­தி­ரமே ஆண் வேடத்தில் பெண்­ணொ­ருவர் பங்­கு­பற்றும் விடயம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

brenda
டெனி பெரஸ் எனும் வீர­ராக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பிரெண்டா, போட்­டி­யில் சிறப்­பாக விளை­யாட ஆரம்­பித்தார். அவர் பெண்­ணாக இருக்­கலாம் என வீரர்கள் எவரும் சந்­தேகம் கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. இறு­தியில் பெனால்டி கிக் ஒன்றை அடிக்க அழைக்­கப்­பட்ட பிரெண்டா, பந்தை அடிப்­ப­தற்­குமுன், தலையில் அணிந்­தி­ருந்த விக், தாடி, முக­மூடி என ஒவ்வொன்றாகக் கழற்றி தன்னை வெளிப்படுத்த, வீரர்கள் திகைத்துப் போயினர்.

1327638

தன்னை பெண்ணாக வெளிப்படுத்திய பின்னர் அந்த பெனால்டி கிக்கை உதைத்தார் பிரெண்டா பிரெஸ். அது வெற்றிகரமான கோலாக அமைந்தது.

 

virarrvirarr

Share.
Leave A Reply