சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற மருதானையை சேர்ந்த இலங்கை பெண் ஒருவருக்கு அந்நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவரை கல்லால் அடித்து கொள்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண் சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நபர் திருமணமாகாதவர் எனவும் அவருக்கு கசையடி தண்டனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதுவராலயம் ,  சவுதி அதிகாரிகளிடம் பேசியுள்ளது.

மேலும் அப்பெண்ணை காப்பாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply