உலகப்புகழ் பெற்ற பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான மிஸ்டர் பீன் (Mr. Bean) கதாபாத்திரத்திற்கு சொந்தமான நடிகர் ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை (54) விவாகரத்து செய்துள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவையில் ஒப்பனை கலைஞராக பணி புரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருடன் கடந்த 1990 ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணத்தில் இணைந்தார்.
அற்கின்சன் அவரது மனைவி சுனேத்ரா (1990 இல்)
இவர்களுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 32 வயதான மற்றுமொரு நகைச்சுவை நடிகையான லூயிஸ் ஃபோர்ட் என்பருடன் ரோவனுக்கு ஏற்பட்டுள்ள காதலே இவ்விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவ்வழக்கை எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுமார் 65 செக்கன்களில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘காரணமின்றிய நடத்தைகளே’ (அதாவது அதிகமாக பேசுதல், தன்னை செவிமடுப்பதில்லை, எப்போதும் நண்பர்களுடன் வெளியே செல்லுதல் போன்றவை உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது) இவ்விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் இவர்களது 24 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
விவாகரத்து வழங்குவதாக தான், அறிவித்தாலும் சுனேத்ரா அட்கின்சனின் முழுமையான பொருத்தம் கிடைக்கும்வரை, விவாகரத்து முடிவு செய்யப்பட மாட்டாது என இதன்போது நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
குறித்த முடிவை வழங்குவதற்காக அவருக்கு 6 வார காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.