பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது.
இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள்.
உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது.
இது இராக்கிலும், சிரியாவிலும் அது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலப்பரப்பில் ஒரு “கேலிஃபேட்” ( இஸ்லாமியப் புனித அரசு) ஆட்சியை நடத்துவதாக கூறிக்கொள்கிறது.
ஆனால் இந்த அமைப்புக்குப் பணம் எங்கிருந்து வருகிறது ?
1.நன்கொடைகள்
குறிப்பாக சௌதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் உள்ள செல்வந்த தனி நபர்களும், இஸ்லாமிய தர்மஸ்தாபனங்களும்தான் இந்த அமைப்புக்கு முக்கிய கொடையாளிகளாக இருந்தனர்.
இந்த சுன்னி கொடையாளிகள் சிரியாவின் அதிபர் அசாத்தை பதவியிலிருந்து இறக்கவே இந்த பணத்தைத் தந்து வந்தனர். அசாத் இஸ்லாமின் அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்.
ஆனால் இந்த வகையில் கிடைக்கும் பணம் இன்னும் சிரியாவுக்கும், இராக்குக்கும் செல்லும் வெளிநாட்டுப் போராளிகளின் பயணத்துக்கே உதவுகிறது; மற்றபடி இந்த அமைப்பு தனது நிதி ஆதாரங்களை வைத்தே பெரும்பாலும் செயல்படுகிறது.
கடந்த 2014ல் மட்டும் ஐ.எஸ் வாரமொன்றுக்கு பல மிலியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கும் என்று அமெரிக்க நிதித்துறை கணிப்பிடுகிறது. மொத்தம் சுமார் 100 மிலியன் டாலர்கள் அது ஈட்டியிருக்கலாம் என்று அது கருதுகிறது. இந்த வருமானம் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பல பொருட்களை உள்ளூர் தரகர்களுக்கு விற்றதிலேயே அதற்குக் கிடைத்திருக்கும். இதை அந்த தரகர்கள் துருக்கி, இரான் அல்லது சிரியா அரசுக்குக் கடத்தி விற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் எண்ணெய் தொடர்பான கட்டமைப்பு நிலைகள்மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் இப்போது இது போன்ற வருவாயைக் குறைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
3.ஆட்கடத்தல்கள்
2014ம் ஆண்டில் ஆட்கடத்தல்கள் மட்டுமே இந்த அமைப்புக்கு சுமார் 20 மிலியன் டாலர்கள் பெற்றுத் தந்தன.
“உளவு அமைப்பு” என்று பெயரிடப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் ஒரு துறையே இந்த கடத்தல் வேலைகளைச் செய்வதற்காகவென்று இருக்கிறது என்று ஐ.எஸ். அமைப்பிலிருந்து வெளிவந்த ஒருவர் கூறுகிறார். அது சிரியாவின் எல்லைக்குள் வெளிநாட்டு செய்தியாளர்கள் கால் வைத்ததுமே அவர்களை இலக்கு வைக்கிறது.
இந்த ஆட்கடத்தல்கள் மூலம் பணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், ஐ.எஸ் அமைப்புக்கு இது ஒரு நல்ல பிரசாரக் கருவியாகவும் அமைகிறது.
4. கொள்ளை, சூறையாடல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல்
ஐ.எஸ் அமைப்பு, தனது முழுமையான அல்லது பகுதிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களை மிரட்டி, மாதமொன்றுக்கு பல மிலியன் டாலர்கள் சம்பாதிக்கிறது என்று அமெரிக்க நிதித்துறை கூறுகிறது.
அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மூலம் செல்பவர்கள், அல்லது அதில் ஏதாவது வேலை செய்பவர்கள், அல்லது அங்கு வசிப்பவர்களுக்கு “சேவைகள்” அல்லது “பாதுகாப்பு” வழங்குவது போன்றவை மூலம் இந்த மாதிரி பண வசூல் நடக்கிறது.
வங்கிகளைக் கொள்ளையடித்தல், சூறையாடல், புராதனப் பொருட்களை விற்றல் மற்றும் கால்நடைகள் மற்றும் பயிர்களைத் திருடுதல் அல்லது அவைகள் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது போன்றவை மூலமாகவும் ஐ.எஸ் லாபமீட்டுகிறது.
5.மதச் சிறுபான்மையினர் மீது வரி
மதச் சிறுபான்மையினர் மீது “ஜிஸ்யா” என்ற சிறப்பு வரியை இந்த அமைப்பு விதித்து, அவர்களைக் கட்டாயமாகப் பணம் தரவைக்கிறது.
கடந்த ஆண்டு இராக்கிய நகரான மோசுல் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு அறிவிப்பை ஐ.எஸ் வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், அனைத்து கிறித்தவர்களும் மதம் மாறவேண்டும், அல்லது ஜிஸியா என்ற சிறப்பு வரியைச் செலுத்த வேண்டும் அல்லது அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேறாமல் இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கூறியது.
“நாங்கள் அவர்களுக்கு மூன்று வழிகளை முன்வைக்கிறோம் – இஸ்லாத்துக்கு மாறுவது; திம்மா ஒப்பந்தம் ( அதாவது ஜிஸ்யா வரி கட்டுவது), இவை இரண்டில் ஒன்றைச் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எங்கள் கத்தி தவிர வேறொன்றும் கிடைக்காது” என்று அந்த அறிவிப்பு கூறியது.
6.அடிமை வியாபாரம்
கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றும் இஸ்லாமிய அரசு பணம் சம்பாதித்தது.
வட இராக்கில் சிஞ்சார் நகரை இஸ்லாமிய அரசு அமைப்பு கைப்பற்றியபோது, யாஸிதி மதச்சிறுபான்மையர் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை அது சிறைப்பிடித்து, பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது.
ஹன்னான் என்ற ஒரு யாஸிதி பெண் ஐ.எஸ் அமைப்பிலிருந்து தப்பியதாகக் கூறினார். பிபிசியிடம் பேசிய அவர், அவரையும் மேலும் 200 பெண்களையும், அடிமை சந்தைக்கு எடுத்துச் சென்று ஐ.எஸ் அமைப்பினர் , ஐ.எஸ் போராளிகள் தமக்குப் பிடித்தவர்களை வாங்கிக்கொள்ள வைத்ததாகக் கூறினார்.
மேற்குலகம் அஞ்சும் ஐ.எஸ்.ஐ.எஸ் (டாயிஷ்) யார்?
பாரீஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி அபவுத் தற்கொலை போலீஸ் அதிரடியில் 7 பேர் கைது -(வீடியோ)
பாரீஸ் : பாரீசில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு திட்டம் வடிவமைத்து தந்த முக்கிய தீவிரவாதியான அப்தெல்ஹமித் அபவுத் (Abdelhamid Abaaoud) இருக்கும் இடம் தெரியவந்து போலீசார் சுற்றிவளைத்தனர்.
அப்போது நடந்த சண்டையில், அபவுத்தின் மனைவி, தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தாள். மற்றொருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தப்பிக்க முடியாத நிைல ஏற்பட்டதை தொடர் ந்துஅபவுத் தற்கொலை செய்து கொண்டான். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் 6 இடங்களில் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். மனிதவெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றால் 129 பேர் இறந்தனர்.
இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதை பெல்ஜியத்தை சேர்ந்த 27 வயது தீவிரவாதியான அப்தெல்ஹமித் அபவுத் தான் முன்னின்று நடத்தினான் என்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பாரீஸ் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டு அதிரடிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்ைட நடத்தி வந்தனர். சுமார் 200க்கு மேற்பட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி பலரை கைது செய்தனர்.
இதில் பல்ேவறு முக்கிய தகவல்கள் தெரியவந்தது. பெல்ஜியத்ைதச் சேர்ந்த அப்தெல்ஹமித் அபவுத் தாக்குதலுக்கு பின்னர் தனது கூட்டாளியுடன், பிரான்ஸ் சாலை வழியாக அண்டை நாட்டுக்கு தப்பிச் சென்றதாக முதலில் கூறப்பட்டது.
இத்தகவலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில், அவன் பாரீசின் புறநகர் பகுதியான செயின்ட் டெனிசிலேயே இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவனை கைது செய்ய போலீசார் விரிவான திட்டம் தீட்டினர். இதன்படி, செயின்ட் டெனிஸ் பகுதியில் குறிப்பிட்ட 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபார்ட்மென்ட்டை நேற்று அதிகாலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அந்த அடுக்குமாடியின் மேல்பகுதியில் ஒரு வீட்டை குறிவைத்து அதிரடிப்படை போலீசார் நகர ஆரம்பித்தனர். இதை எதிர்பார்த்திருந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் தாக்க ஆரம்பித்தனர்.
அதிரடிப்படை போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்க, ஒரு பெண் திடீரென ஓடிவந்து, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து சிதறினாள். பாதுகாப்பு படையினர் நவீன உடைகளை அணிந்திருந்தால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
துப்பாக்கிச் சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் அதிரடிப்படையினர் ஒவ்வொரு பிளாட்டாக சென்று சந்தேகப்பட்டியலில் இருந்த 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர் தாக்குதலை ெதாடர்ந்து தீவிரவாதி அபவுத் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கட்டிடத்திலேயே அவன் தற்கொலை செய்து கொண்டதாக பிரான்ஸ் தூதர் ெதரிவித் துளார். ஆனால், பிரான்ஸ் அரசு அதை உறுதிப்படுத்தவில்லை.
வரலாற்று சிறப்புமிக்க பகுதி
தீவிரவாதி அபவுத் பதுங்கி உள்ள பாரீசின் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸ், ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஸ்டாடே டே பிரான்ஸ் கால்பந்து மைதானத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த மைதானத்திலும் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 50 பேர் வரை இறந்தனர். இந்த பகுதியில், அரச குடும்பத்தினர் இறந்தால் அடக்கம் செய்யப்படும் தேவாலயமும் அமைந்துள்ளது.
மிக அமைதியான இப்பகுதியில் கோடீஸ்வரர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும், பாரம்பரியமான அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே இங்கு அமைந்துள்ளன.
பிரான்ஸ் விமானங்களுக்கு குண்டுமிரட்டல்
அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் இரவு கிளம்பிய 2 பிரான்ஸ் விமானங்களுக்கு குண்டுமிரட்டல் விடுக்கப்பட்டதால் அதை வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
முதல் விமானம் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பாரீஸ் புறப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து, அந்த விமானம் சால்ட் லேக் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.
இதேபோல் வாஷிங்டன்னில் இருந்து கிளம்பிய மற்றொரு விமானம், கனடாவின் ஹாலிபேக்ஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், எதற்காக இந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் முறைப்படி தெரிவிக்காவிட்டாலும், அவற்றுக்கு குண்டுமிரட்டல் வந்ததாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
10 முறை குண்டு வெடித்தது
தீவிரவாதிகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் பாப்டிஸ்டே மேரி கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட அடுக்குமாடியில் சுமார் 10 முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
6 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு துப்பாக்கிச்சண்டை சரமாரியாக நடந்தது. சுமார் 500 முறை துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார். தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால், அப்பகுதியில் பயங்கர குண்டுச்சத்தம் கேட்டது.
போக்குவரத்து முடக்கம்
அதிரடிப்படையினரின் நடவடிக்கையை தொடர்ந்து, செயின்ட் டெனிஸ் பகுதியில் நேற்று அதிகாலையில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்பகுதியில் இருந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் வெளியே நடமாடவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் செயின்ட் டெனிஸ் நகரில் நேற்று காலை முதல் பரபரப்பாகவே இருந்தது. சம்பவத்தை கேள்விப்பட்டு ஏராளமான பத்திரிகையாளர்கள் நள்ளிரவில் இருந்தே, சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் அருகே திரண்டு செய்திகளை திரட்டினர்.
சினிமா பாணியில் பரபரப்பு
தீவிரவாதி அபவுத் தங்கியிருப்பது தெரியவந்ததும் நேற்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 4 மணிக்கு போலீசார் அப்பகுதியை, கவச வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சுற்றி வளைத்தனர்.
சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இருந்த சாதாரண பொதுமக்கள், அடையாளம் தெரிவதற்காக மஞ்சள் நிற பிளாஸ்டிக் காகிதம் போர்த்தப்பட்டு போலீசாரால் குடும்பம், குடும்பமாக வெளியேற்றப்பட்டனர்.
Paris Police Operation to Get ISIS Terrorists End with 7 Arrest