சென்னை: என்னுடைய முதல் காதலை என்னால் என்றுமே மறக்க முடியாது என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளன.
நடிக்க வந்து 12 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா சமீபத்தில் தனது முதல் காதல் குறித்து மனந்திறந்து கூறியிருக்கிறார். நயன்தாராவின் முதல் காதலைப் பற்றி இங்கே காணலாம்.
18-1447823221-nayantara-d1s21-600
3 காதல்
3 பேர் 3 காதல் என்பது மாதிரி நயன்தாராவின் வாழ்க்கை 3 காதல் 1 நபர் என்று மாறிவிட்டது. முதலில் சிம்புவைக் காதலித்து அந்தக் காதல் என்ன காரணத்தினாலோ முறிந்து போனது.
பின்னர் தன்னை விட 1 மடங்கு வயது அதிகமான பிரபுதேவாவை காதலித்தார். எல்லாம் நன்றாகப் போய் திருமணம் செய்யும் சமயத்தில் பிரபுதேவா தனது குழந்தைகளை மறக்க முடியவில்லை என்று கூறியதால் 2 வது காதலும் முறிந்து போனது.
தற்போது 3 வதாக இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார்.இந்த நிலையில் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன்தாரா மனம் திறந்து கூறியிருக்கிறார்.18-1447823228-nayantara-smilee-12-600

முதல் காதல்
‘‘ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். எந்த வயதிலும் அந்த காதல் வரலாம். வாழ்நாள் முழுவதும் அந்த காதலை மறக்க மாட்டார்கள்.
18-1447823252-nayanthara2334-600

என்னுடைய முதல் காதல்
எனக்கும் சிறு வயதில் அப்படி ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பள்ளிக்கூடம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்கூடியது.
நான் பையன்கள், பெண்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகுவேன். இதனால் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். ஒரு பையனைத் தவிர அனைவரும் என்னுடன் நட்போடு பழகினார்கள்.நான் வகுப்புக்கு செல்லும்போதெல்லாம் எனது இருக்கை முன் உள்ள மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருக்கும். முதல் நாள் அதை பார்த்து பதற்றமாக இருந்தது. தோழியிடம் சொன்னேன். பெரிதுபடுத்தாதே விட்டுவிடு என்றாள்.
18-1447823242-nayantara-110-600

பள்ளி முதல்வரிடம் புகார்
முதல் நாளோடு நிற்கவில்லை,மறுநாளும் அதேபோல் ரோஜாவும் காதல் கடிதமும் மேஜையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. இதனால் பயந்து போனேன். வீட்டில் எனது அம்மா, அப்பாவிடம் இதனை சொன்னேன். அவர்கள் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார் செய்தார்கள். அவர் விசாரணை நடத்தி ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன்தான் தினமும் காதல் கடிதமும் ரோஜாப்பூவும் வைத்தவன் என்று கண்டுபிடித்தார். அவனை கடுமையாக திட்டி கண்டித்தார்.
18-1447823235-nayantara-d1d1-600

முகத்தைத் திருப்பிக்கொண்டு
அதன்பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவான். அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதை என்னால் மறக்கவே முடியாது”. இவ்வாறு நயன்தாரா தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். சிம்புவைப் பத்தி சொல்வீங்கன்னு பார்த்தா கடைசில சின்னப் பையனப் பத்தி சொல்றீங்க, என்னமா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா!
Share.
Leave A Reply