பாட்டியின் கோடரிபட்டு குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் மஹியங்கனை- தியகோபல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கோடாரியால் விறகு வெட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது குழந்தை தற்செயலாக உள் நுழைந்ததாகவும் , இதன்போது கோடரிபட்டு அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாட்டி வேகமாக கோடரியை ஓங்கி விறகை வெட்டிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் வயது 18 மாதங்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளதாகவும் , முதலில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
19-11-2015
இந்த சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 55 வயதான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் வவுனியா நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றன