திருவனந்தபுரம்: கேரள போலீசார் வாடிக்கையாளர்கள் போன்று நடித்து மாடல் ரஷ்மி நாயர் மற்றும் அவரது கணவர் ராகுல் பசுபாலனை கைது செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்துள்ளனர்.
அவர்கள் விபச்சாரம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் ரஷ்மி, ராகுல், ரவுடி அக்பர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொச்சு சுந்தரிகள்
சவுதியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக்கில் உள்ள கொச்சு சுந்தரிகள் பக்கத்தில் தனக்கு வேண்டிய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார். அவர் கேட்கும் பெண்களை ரஷ்மியும், ராகுலும் அவருக்கு அளித்து வந்துள்ளனர்.
ரஷ்மி
ராகுல் பெண்களை அழைத்து வந்து வாடிக்கையாளர்களிடம் விடுவார். ரஷ்மி தான் அவர்களுக்கான பணத்தை பேசி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தான் கொச்சு சுந்தரிகள் பக்கம் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.
போலீஸ்
விசாரணையில் ரஷ்மியும், அவரது கணவரும் பெண்கள், சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே சவுதியில் இருந்த நபரை போலீசார் நைசாகப் பேசி கேரளாவுக்கு வரவழைத்து கைது செய்தனர்.
வாடிக்கையாளர்கள்
போலீசார் சிலர் ராகுலை அணுகி ஆசையை தீர்த்துக் கொள்ள பெண்கள் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் போன்று கேட்டுள்ளனர். ராகுல் அவர்களை ரஷ்மியிடம் விலையை பேசி அளிக்குமாறு கூறி அவரை வரவழைத்துள்ளார்.
கைது
ரஷ்மி ஹோட்டலுக்கு வந்தவுடன் ராகுலையும், அவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தூக்கிவிட்ட ஃபேஸ்புக்காலேயே போலீசில் சிக்கி கிண்டல் செய்யப்படும் ரஷ்மி, ராகுல்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் எந்த ஃபேஸ்புக்கால் பிரபலம் ஆனார்களோ அதே ஃபேஸ்புக்கால் போலீசில் சிக்கியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் தலைவருமான ராகுல் பசுபாலனும் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர்கள்.
கேரளாவில் கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தி பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பிரபலம் ஆனவர்கள். இளம்ஜோடிகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆட்டம்போட்ட கும்பலை கண்டித்து அவர்கள் அந்த போராட்டத்தை நடத்தினர்.
ஃபேஸ்புக்
ரஷ்மி, ராகுல் நடத்திய கிஸ் ஆப் லவ் போராட்டம் ஃபேஸ்புக்கில் கண்டமேனிக்கு பிரபலம் ஆனது. ஆளாளுக்கு அந்த போராட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
ரஷ்மி
ரஷ்மி நாயர் அவ்வப்போது தனது நிர்வாண, அரை நிர்வாண, பிகினி புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வந்தபோது கிடைக்காத பாப்புலாரிட்டி கிஸ் ஆப் லவ் மூலம் கிடைத்தது.
விபச்சாரம்
ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கம் துவங்கி பெண்கள், சிறுமிகளின் புகைப்படத்தை போட்டு விபச்சார விளம்பரம் செய்து வந்துள்ளனர் ரஷ்மியும், ராகுலும்
போலீஸ்
கொச்சு சுந்தரிகள் பக்கம் பற்றி போலீசாருக்கு புகார் சென்றது. அது குறித்த விசாரணையில் தான் ரஷ்மியும், ராகுலும் சிக்கினர். எந்த மக்கள் ஃபேஸ்புக்கில் ரஷ்மி, ராகுலை பாராட்டினார்களோ, தற்போது அவர்களே அந்த ஜோடியை காரித் துப்பி திட்டியும், கிண்டல் செய்தும் வருகிறார்கள்.