பனாமுர- கொடவல மஹாவித்தியாலத்தில் கல்வி கற்கும் சதுர மதுவந்த எனும் மாணவன் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவன் வீடுவந்து சேராததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

பின்னர் அவரது பாடசாலைக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது சிறுவன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Share.
Leave A Reply