திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள கேரளத்து ராகுல் பசுபாலன், தனது விபச்சார நெட்வொர்க் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தனது விபச்சாரப் பெண்கள் பட்டியலில் பல மலையாள நடிகைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரும் இவரது மனைவியும் மாடல் அழகியுமான ரஷ்மி நாயரும் இணைந்து இந்த விபச்சாரத் தொழிலை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் பொறி வைத்துப் பிடித்த போலீஸார் இவர்கள் இருவர் உள்பட 12 பேரைக் கைது செய்துள்ளனர்.

என்ன கொடுமைன்னா
இந்த வி்வகாரத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த ஆண்டு கேரளாவை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முத்தப் போராட்டத்தை ரஷ்மியும், ராகுலும்தான் நடத்தினர் என்பதுதான். இப்போது இவர்கள் மிகப் பெரிய விபச்சாரக் கும்பலாக உருவெடுத்திருப்பது கேரள மக்களை மட்டுமல்ல, இவர்களின் புரட்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களையும் அதிர வைத்துள்ளது.

கொச்சு சுந்தரி!
ராகுலும், ரஷ்மி்யும் சேர்ந்து கொச்சு சுந்தரி என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்தி வந்தனர். இதன் மூலமாக விபச்சாரத்தை நடத்தி வந்தனர். இந்த இணையதளம் முழுவதும் ஆபாச நிர்வாணப் படங்கள் தான் நிரம்பி வழிந்துள்ளன.

லிவிங் டு கெதர்
போலீஸாரிடம் தற்போது பசுபாலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் 7 வருடத்திற்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றேன். அங்குதான் ரஷ்மியுடன் அறிமுகம் கிடைத்தது. இருவரும் காதல் கொண்டோம். திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ ஆரம்பித்தோம்.

விபச்சாரத்தில் குதித்தோம்
இந்த நிலையில்தான் இருவருக்கும் விபச்சாரத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆன்லைன் மூலமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். தொழில் பிக்கப் ஆனதைத் தொடர்ந்து கொச்சிக்கு இடம் பெயர்ந்தோம். தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் நாங்கள் சிக்கி விட்டோம்.

செம காசு
இந்தத் தொழிலில் எங்களுக்கு மாதம் ரூ. 20 லட்சம் அளவுக்கு வருவாய் கிடைத்தது. நன்றாக போய்க் கொண்டிருந்தது. எங்களிடம் பல நடிகைகளின் அறிமுகமும் இருந்தது. அவர்களும் எங்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அம்மா நடிகை
மலையாளத்தில் பிரபலமாக உள்ள பலரையும் நாங்கள் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளோம். தற்போது மலையாளத்தில் அம்மா வேடங்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகையுடன் ஒரு இ்ரவைக் கழிக்க ரேட் ரூ. 2.25 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார் ராகுல் பசுபாலன். அடேங்கப்பா!
Post Views: 62