’24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து 24 கைதி­களும் மீண்டும் சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

நீதி­மன்­றத்­தி­லி­ருந்து இந்த அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை பஸ் வண்­டிக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட போது அங்கு கூடி நின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தனர். இந்த விமர்­ச­னங்கள் அவர்­க­ளது உள்ளக்கிடக்­கை­களை வெளி­யி­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

புதன்­கி­ழமை மாலை கொழும்பு நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டும் பிணை பெற முடி­யாமல் மீண்டும் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட 31 தமிழ் அர­சியல் கைதி­களில் 24 கைதிகள் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்­க­ளது உற­வி­னர்­க­ளுடன் சொந்த இடங்­க­ளுக்கு திரும்பிச் சென்­றனர்.

மேலும் 30 அர­சியல் கைதிகள் இன்னும் 20 நாட்­களில் விடு­விக்­கப்­ப­டுவர் என்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்பிடத்­தக்­கது.

தமிழ் கைதிகள் விடு­தலை குறித்து நீதி அமைச்சு அறிக்கை,

24 தமிழ் அர­சியல் கைதிகள் முற்றும் முழு­தாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. பிணை­யி­லேயே விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து விசா­ரணை நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்டால் தண்­டனை வழங்­கப்­ப­டு­மென்று நீதி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்து ஒரு சில மாதங்­களில் சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தம்மை விடு­விக்கும்படி அல்­லது விசா­ரணை நடத்தும்படி உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­தனர்.

சிறை­யி­லுள்ள அர­சியல் கைதி­களின் எண்­ணிக்கை குறித்து இன்னும் சந்­தேகம் நில­வு­கின்­றது. ஒவ்­வொரு தரப்­பினரும் ஒவ்­வொரு எண்ணிக்­கையை தெரி­விக்­கின்­றனர். இந்த எண்­ணிக்கை 217 முதல் 254 வரை இருக்­கலாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்ந்­தது. கைதி­களில் ஒரு சிலர் உணர்­வி­ழந்­தனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிரதம­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்து பேச்­சு­வார்­ததை நடத்­தி­யது.

இதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிறைச்­சா­லை­க­ளுக்கு சென்று உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதிகளை சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் விடு­த­லைக்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்து ஆறுதல் கூறினர்.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் அவ­ச­ர­மாக தமிழ்க் கைதிகள் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீபா­வளி தினத்­துக்கு முன்னர் 7ஆம் திகதி விசா­ர­ணை­யின்றி நீண்ட கால­மாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகை கைதி­க ளை விடு­விக்க வாக்­கு­று­தி­ய­ளித்திருந்தார்.

இந்த வாக்­கு­று­தியை அடுத்து உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கைதிகள் தமது உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட்­டனர். ஆனால், தீபா­வளி கடந்தும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

தீபா­வளி தினத்­துக்கு மறுநாள் 11ஆம் திகதி புதன்­கி­ழமை காலை 24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்தப்­பட்­டனர்.

இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதிமன்­றத்தில்  தெரி­வித்­ததை  அடுத்து 24 கைதி­களும் மீண்டும் சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

நீதி­மன்­றத்­தி­லி­ருந்து இந்த அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை பஸ் வண்­டிக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட போது அங்கு கூடி நின்ற ஊடகவி­ய­லா­ளர்­க­ளிடம் பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தனர். இந்த விமர்­ச­னங்கள் அவர்­க­ளது உள்ளக் கிடக்­கை­களை வெளி­யி­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

அன்­றைய தினமே மாலை இந்த அர­சியல் கைதிகள் மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். காலையில் ஆஜர் செய்­யப்­பட்ட கைதி­களின் எண்­ணிக்கை 24 ஆக இருந்­தது. ஆனால் மாலையில் ஆஜர் செய்­யப்­பட்ட கைதி­களின் எண்­ணிக் கை 31ஆக அதிகரித்திருந்தது. இது எப்­படி என்­பது தெரி­ய­வில்லை.

நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட கைதி­களை பிணையில் விடு­விப்­பது தொடர்­பாக பிர­தம நீதிவான் கிஹான் பில­பிட்­டிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

இரு பெண்கள் உட்­பட 31 கைதி­க­ளையும் விடு­விக்க சட்­டமா அதிபர் ஆட்­சே­பனை தெரி­விக்­க­வில்லை என அரச சட்­டத்­த­ரணி எச்.ஏ.நவவி தெரி­வித்­ததையடுத்து ஒவ்­வொரு கைதி­க­ளையும் தலா பத்து லட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரண்டு சரீரப் பிணையில் விடு­விக்கும் படி நீதிவான் உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் பிணையில் விடு­விக்­கப்­படும் கைதி­க­ளுக்கு மேலும் சில நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டது.

இவர்கள் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு முறை கொழும்பு அல்­லது வவு­னி­யா­வி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வுக்கு சென்று கைச்சாத்திட வேண்டும். தாம் வசிக்கும் பிர­தே­சத்தை விட்டு வேறு பிர­தே­சத்­துக்கு குடி பெயர்­வ­தாக இருந்­தாலும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வுக்கு அறி­விக்க வேண்டும்.

அத்­துடன் கைதிகள் கட­வுச்­சீட்டு வைத்­தி­ருந்தால் அதை நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்க வேண்டும் அல்­லது தம்­மிடம் கட­வுச்­சீட்டு இல்லை எனத் தெரி­விக்கும் சத்­தியக் கட­தா­சி­யொன்றை சமர்ப்­பிக்க வேண்டும்.

கைதிகள் 11ஆம் திகதி காலை விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என எதிர்­பார்த்து கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் காத்­தி­ருந்த கைதி­களின் உற­வி­னர்கள் கைதிகள் காலையில் விடு­விக்­கப்­ப­டா­ததால் கண்ணீர் சிந்­தி­ய­படி ஏமாற்­றத்­துடன் திரும்பிச் சென்­றனர்.

அன்று மாலை எதிர்­பாரா வண்ணம் இந்த அர­சியல் கைதிகள் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட போதும் பிணையில் எடுக்க உற­வி­னர்கள் எவரும் வரா­ததால் அவர்கள் மீண்டும் சிறைச்­சா­லைக்கே கொண்டு செல்­லப்­பட்­டனர்.

பொது மன்­னிப்பின் கீழ் தம்மை விடு­விக்கும்படி மீண்டும் இந்த அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­துள்­ளனர்.

indexநிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­படும் -ஜனா­தி­பதி

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்க முன்­னின்று உழைத்த சமூக நீதிக்­கான அமைப்பின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரரின் இறுதிக் கிரி­யை­களின் போது இரங்­க­லுரை நிகழ்த்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தாக சபதம் செய்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகு­தியில் சமூக நீதிக்­கான அமைப்பின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை கடு­மை­யாக விமர்­சித்து வந்தார்.

சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை முற்­றாக ஒழிப்போம் என்று வாக்­கு­று­தி­ய­ளித்தே பத­விக்கு வந்­தனர். ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கு எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை.

mathuluva

மஹிந்த ராஜபக்ஷ இறுதிக் காலத்தில் தொடர்ந்த ஜனா­தி­பதி பத­வியைத் தக்க வைத்­துக்­கொள்ளும் வகையில் அதி­ர­டி­யாக 18ஆவது அரசி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நிறை­வேற்­றினார்.

இந்த திருத்தம் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒருவர் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் எத்­தனை முறை வேண்­டு­மா­னாலும் போட்­டி­யி­டு­வ­தற்கு வழி­வ­குத்­தது.

மஹிந்த ராஜபக்ஷ தன்­னிச்­சை­யாக எடுக்கும் முடி­வுகள் நாட்டில் சர்­வா­தி­கா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ள­தாக மாது­லு­வாவே சோபித தேரர் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­பி­ருந்தே விமர்­சித்து வந்தார்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதும் சமூக நீதிக்­கான அமைப்பின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் முன்னாள் ஜனா­தி­பதி சந்திரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகி­யோரும் மேலும் பல சமூக அமைப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு பொது வேட்­பா­ளரை நிறுத்தும் முயற்­சியை மேற்­கொண்­டனர்.

இதற்­க­மைய பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒத்­து­ழைப்­புடன் கள­மி­றக்­கப்­பட்டார். ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன நான் பத­விக்கு வந்­ததும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்தார். அது­மட்­டு­மன்றி, நான் ஒரு முறை மாத்­தி­ரமே ஜனா­தி­பதி பத­வியை வகிக்கப் போவ­தா­கவும் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் வெற்றி பெற்­றதும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கும் வகையில் 19 ஆவது திருத்­தத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்க ஆத­ர­வ­ளித்தார். இருந்தும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழிக்க அவ­ருக்கு சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.

என­வேதான், தான் பத­வி­யி­லி­ருக்கும் போதே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தாக மாது­லு­வாவே சோபித தேரரின் சட­லத்­துக்கு முன்னால் வைத்து அவர் இவ்­வாறு சப­த­மிட்­டுள்ளார்.

ஊழல் மோச­டிகள் தொடர்­பாக புதிய அர­சாங்கம் மேற்­கொண்டு வந்த விசா­ர­ணைகள் மற்றும் அரசின் போக்கு தொடர்­பாக சமீப கால­மாக மாது­லு­வாவே சோபித தேரர் விரக்­தி­ய­டைந்­தி­ருந்தார்.

இந்த நிலையில், சுக­யீ­ன­முற்ற தேரர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சத்­திர சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக சிங்­கப்­பூ­ரி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். அவர் அங்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை உயி­ரி­ழந்தார்.

மாது­லு­வாவே சோபித தேரரின் இறுதிக் கிரி­கைகள் கடந்த வியா­ழக்­கி­ழமை பூரண அரச மரி­யா­தை­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­னா­லுள்ள மைதா­னத்தில் நடை­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

somavansaசோம­வன்ச – வீர­வன்ச கூட்டு

ஜே.வி.பி.யிலி­ருந்து சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நீக்­கப்­பட்ட விமல் வீர­வன்­சவும் கடந்த வருட ஜே.வி.பி.யிலி­ருந்து வில­கிய சோமவன்ச அம­ர­சிங்­கவும் இப்­போது ஒன்­றாக இணைந்­துள்­ளனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் சோம­வன்ச அம­ர­சிங்க ஏற்­பாடு செய்­தி­ருந்த கார்த்­திகை வீரர்கள் தின வைபவத்தில் விமல் வீர­வன்ச பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டார்.

அவர் வைப­வத்­துக்கு வருகை தந்த போது அவரை சோம­வன்ச அம­ர­சிங்க ஆரத்­த­ழுவி வர­வேற்றார். இது அர­சி­யலில் நிரந்­தர நண்பர்களும் இல்லை. நிரந்­தர எதி­ரி­களும் இல்லை என்­பதை எடுத்துக் காட்­டு­வ­தாக இருந்­தது.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட தேசிய சுதந்­திர முன்­ன­ணி யின் தலைவர் விமல் வீர­வன்ச ஒரு கூட்­ட­ணியை உருவாக்கி வரு­கிறார்.

இந்தக் கூட்­ட­ணியில் மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வான மக்கள் ஐக்­கிய முன்­னணி, இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி, லங்கா சம­ச­மாஜக் கட்சி ஆகி­ய­னவும் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து போட்­டி­யிடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கூட்ட­ணியில் சோம­வன்ச அம­ர­சிங்­கவின் ஜனதா சேவக கட்­சியும் இணைந்து போட்­டி­யி­டு­மெனத் தெரிய வரு­கின்­றது.

இந்த வைப­வத்தில் உரை­யாற்­றிய ஜாதிக சேவக் கட்­சியின் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்க ஜே.வி.பி. இப்­போது மூன்று பேரின் கட்டுப்பாட்­டி­லுள்­ளது. அக்­கட்சி மேலும் பிள­வு­படும் சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தாக விமர்­சித்­துள்ளார்.

avangard-sri-lankaசூடு பிடிக்கும் எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவ­காரம்

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவ­கா­ரத்தில் அமைச்­சர்கள் மட்­டத்தில் இப்­போது மோதல் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. எவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நடை­பெற்ற விவா­தத்தில் எவன்கார்ட் ஆயுதக் கப்­ப­லுக்கு ஆத­ர­வாக உரையாற்­றிய சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சாலை புன­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன தனது பத­வியை ராஜி­னாமா செய்தது தெரிந்­ததே.

அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, விஜே­தாச ராஜபக் ஷ, வஜிர அபே­வர்த்­தன ஆகியோர் எவன் கார்ட் மிதக்கும் கப்பல் விவ­கா­ரத்­துக்கு ஆத­ர­வாக கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இப்­போது அமைச்சர் ஹரீன் பெர்­ணான்­டோவும் இந் தக் குழுவில் இணைந்­துள்ளார்.

ஆரம்பம் முதலே எவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவ­கா­ரத்­துக்கு எதி­ராக அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, பாட்­டாலி சம்­பிக ரண­வக, அர்­ஜூன ரண­துங்க ஆகியோர் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்த விவ­காரம் தொடர்­பாக விஷேட அமைச்­ச­ரவைக் கூட்­ட­மொன்றும் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் எவன்கார்ட் கப்பல் விவ­கா­ரத்­துக்கு ஆத­ர­வாக ஊட­கங்­களில் கருத்து தெரி­வித்து வந்த அமைச்­சர்கள் எவரும் வாய் திறக்கவில்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அமைச்­ச­ரவை முடி­வு­ களை வெளி­யிடும் செய்­தி­யாளர் மாநாட் டில் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எவன்கார்ட் கப்பல் நிறு­வ­னத்தை கடற்­ப­டை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்கும் படி உத்­த­ர­விட்­டுள்ளார். இப்போது கடற்­ப­டை­யினர் எவன்கார்ட் கப்பலையும் அதிலுள்ள ஆயு தங்களையும் பொறுப்பேற்கும் நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளனர்.

KumaranPathmanathanTalk2கே.பி. என்ற குமரன் பத்மநாதன் விவகாரம்

கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மீது 182 குற்றச் சாட்டுகளை சுமத்தி ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் வழக்கொன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளில் 62 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் தெரி வித்திருந்தது.

இதன் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 2016 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்கும் படி உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.

நீதிமன்றில் ஆஜராகும்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழைப்பாணை

2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது மஹிந்த ராஜபக் ஷ பயன்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பஸ்க ளுக்கு பணம் செலுத்தாதது தொடர்பாக கொழும்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக் கிழமை மஹிந்த ராஜபக் ஷ உட்பட எழு பேரை 2016 மார்ச் மாதம் 10ஆம் திகதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி அழைப் பாணை பிறப்பித்துள்ளது.

-எஸ். கணேசன்-

Share.
Leave A Reply