தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக அமெ­ரிக்க நடிகர் சார்ளி ஷீன் பகி­ரங்­க­மாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, சார்ளி ஷீனின் முன்னாள் காத­லி­களில் சுமார் 700 பேர் அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கக்­கூடும் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

50 வய­தான நடிகர் சார்ளி ஷீன் தனக்கு 4 வரு­டங்­க­ளாக எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக கடந்த வாரம் தொலைக்­காட்சி செவ்­வி­யொன்றில் ஒப்­புக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த இவர் 3 தடவைகள் திரு­மணம் செய்­தவர்.

அத்­துடன் சுமார் 5000 பெண்­க­ளுடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் முன்னர் கூறி­யி­ருந்தார்.

1340421தனக்கு எச்.ஐ.வி. ஏற்­பட்­டுள்­ளதை அறிந்­து­கொண்ட சிலர் இத்­த­க­வலை பகி­ரங்க­மாக்கப் போவ­தாக தன்னை அச்­சு­றுத்தி தன்­னிடம் 10 லட்சம் டொலர்கள் வரை பணம் கறக்க முயற்­சித்­த­தா­கவும் கடந்த வாரம் சார்ளி ஷீன் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த பகி­ரங்க அறி­விப்பின் மூலம், தன்னை அச்­சு­றுத்தி பணம் கறக்க முயற்­சிப்­ப­வர்­களை செய­லி­ழக்கச் செய்­து­வி­டலாம் என அவர் நம்­பி­யி­ருந்தார்.

ஆனால், சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. ஏற்­பட்­டுள்­ள­தாக அறிந்த அவரின் முன்னாள் காத­லி­க­ளில் பலர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

சார்ளி ஷீன் மூலம் தமக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என அவர்கள் அஞ்­சு­கின்­றனர்.

”தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை சார்ளி ஷீன் என்­னிடம் ஒரு­போதும் கூற­வில்லை” என அவரின் முன்னாள் காத­லி­யான ப்றீ ஒல்சன் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் சார்ளி ஷீனுக்கு எதி­ராக அவரின் முன்னாள் காத­லி­களில் 700 பேர் வழக்குத் தொட­ரக்­கூடும் என ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

1340423ஏற்­கெ­னவே 75 பெண்கள் இது தொடர்­பாக சட்­டத்­த­ர­ணி­களை நாடி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சார்ளி ஷீனுக்கு பெரும் புகழை பெற்­றுக்­கொ­டுத்த தொலைக்­காட்சித் தொடர் “டூ அன்ட் ஏ ஹாவ்மேன்” எனும் தொட­ராகும்.

இத்­தொ­டரில் சார்ளி ஷீனுடன் இணைந்து நடித்த நடிகை ஜெனி மெக்­கார்த்­தியும் சார்ளி ஷீன் மீது அதி­ருப்தி கொண்­டுள்ளார்.

“சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து அவர் என்னிடம் கூறியிருக்க வேண்டும்.

1340415

“டூ அன்ட் ஏ ஹாவ்மேன்” ­தொ­டரில் சார்ளி ஷீன், ஜொனி மெக்கர்த்தி

…………………………………………………………………………………………

இது குறித்து அறிந்திருப்பதற்கான தகுதி எனக்கு உள்ளது” என ஜொனி மெக்கர்த்தி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply