எனது படங்களை முகநூலில் பிரசுரிக்குமாறு வித்தியா கொலை சந்தேகநபர்களில் ஒருவரான பிரகாஸ் அல்லது சுவிஸ் குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

இவ்விசாரணையின் பின்னர் நீதிமன்றை விட்டு வெளியே வந்த சுவிஸ் குமார் அங்கு புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் ஒருவரை நோக்கி “இதுவரை என்னை நீங்கள் பலமுறை படங்கள் எடுத்தீர்கள் .அவற்றை தற்போது முகப்புத்தகத்தில் அலங்கரித்து பிரசுரிக்க ஏன் முடியாது?” என கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அவ்விடத்திற்கு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் *வீண் கதை பேசாது சிறைச்சாலை வாகனத்தில் ஏறுமாறு” சுவிஸ்குமாரை நோக்கி கூறினார்.

Share.
Leave A Reply