இஸ்தான்புல்: துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு ராணுவ போர் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி சேனல் எடுத்து ஒளிபரப்பியுள்ளது.

விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுவது அந்த காட்சிகளில் உள்ளது. துருக்கி வான் எல்லைக்குள் அந்த விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே துருக்கி போர் விமானங்கள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த தொலைக்காட்சி சேனல் கூறுகிறது.

Turkey-shoots-down-Russian-military-jet-dailymail10 முறை அந்த விமானத்தை எச்சரித்த பின்னரே தங்களது போர் விமானங்கள் அதை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியுள்ளது. இந்த தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் 2 பைலட்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பிவிட்டனர்.

இதில் ஒரு விமானியை சிரிய நாட்டில் அதிபருக்கு எதிராக போராடி வரும் சிரிய சுதந்திரப் படை போராளிகள் கைது செய்துள்ளதாகவும், இன்னொருவர் நிலைமை தெரியவில்லை என்றும் துருக்கி அறிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எந்த நாட்டுடையது என்பது முதலில் தெரியவில்லை. சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாட்டு படைகளும் போர் புரிந்துவருகின்றன. எனவே இது எந்த நாட்டு போர் விமானமாக இருக்கலாம் என்ற குழப்பம் நீடித்தது.

ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அது தங்கள் நாட்டு விமானம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “துருக்கி ராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம்.

ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6,000 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

விமானத்தில் இருந்த பைலட்டுகள் கீழே குதித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை” இவ்வாறு ரஷ்யா கூறியுள்ளது.

Share.
Leave A Reply