அண்மையில் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என்று மிரட்டல் வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று ஹாலிவுட் படக்காட்சிகளைக் கொண்டு பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் இடிந்து விழுவதைப் போன்ற மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டுவீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிரான்ஸ் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பாரிஸ் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நேற்று சிரியாவில் உள்ள ஊடக அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் ஈபிள் கோபுரம் தகர்க்கப்படுவது போன்ற காட்சிகள் உள்ளன. இதை “G.I. Joe: The Rise of Cobra” என்ற ஹாலிவுட் படத்திலிருந்து எடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் உபயோகித்துள்ளனர்.
வீடியோவில் ஒரு தீவிரவாதி நேரடியாகவே பிரெஞ்சு அதிபருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறான். மற்றொரு தீவிரவாதியோ “எங்கள் நாட்டில் நீங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் வரை உங்கள் நாட்டில் தாக்குதல் நடக்கும்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. அடுத்தடுத்த தாக்குதல்கள் இதை விட வலிமையானதாக இருக்கும்.” என்று மிரட்டல் விடுத்துள்ளான்.
இந்த புதிய வீடியோ சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest Russian Airstrike destroys ISIS oil refinery, storage, production in Deir Ezour
Moderate rebels use US missile to destroy Assad forces’ target
Amazing Footage ISIS Rats You Can Not Escape from Shia PMU fighters
Imam Ali brigade Fighters crushed a bunch of ISIS terrorists in Makhoul Mountains
At 00:44 ISIS rats running away
At 2:55 Execution of an ISIS rat