வீட்டில் நீர் தாங்கியொன்றில் குளித்த யுவதியொருவரை தனது கையடக்கத்தொலைபேசி மூலம் ரகசியமான முறையில் படம் பிடித்த இளைஞனொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 வயதான குறித்த இளைஞன் , யுவதி குளிப்பதை மறைந்திருந்து படம் பிடித்துள்ளார்.
எனினும் அவ்விளைஞன் படம் பிடிப்பதை யுவதி கண்டுள்ளதுடன், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞனைப் பிடித்து மரத்தில் கட்டிய யுவதியின் பெற்றோர் மற்றும் சகோதரர் , பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இட த்துக்கு வந்த பொலிஸார் அவ்விளைஞனை கைது செய்ய முற்படுகையில் அவர் தன்னிடமிருந்த சிறு கத்தியால் பொலிஸாரை தாக்கி தப்பியுள்ளார்.
மேலும் அங்கிருந்த வீடொன்றுக்குள் நுழைந்து ஒளிய முற்பட்டுள்ளார். எனினும் அவ்வீட்டுக்காரர் , குறித்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முயன்றவேளையில் அவரையும் தாக்கி தப்பியுள்ளார்.
எனினும் பின்னர் பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞன் கொழும்பு , முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் , அவர் கெப்பற்றிக்கொல்லாவையில் உள்ள உறவினரொருவரின் வீட்டுக்கு சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.